Veera

Rajinikanth Veera

ஆத்துல அன்னக்கிளி

பாடகர்கள் : Arun Mozhi
பாடலாசிரியர் : Isaignani Ilayaraja
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகர் : அருண் மொழி இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஆத்துல அன்னக்கிளி
தேச்சு நீ மஞ்ச குளி
ஆத்துல அன்னக்கிளி
தேச்சு நீ மஞ்ச குளி

ஆண் : என்னை ஏன் தொறத்துன
மனச ஏன் வருத்துன
உனக்கு நா ஒருத்தனா
எப்பவும் இருப்பேனா

ஆண் : அடி அச்சாரம் போடாம
ஆடுதடி லோலாக்கு
பூங்கலுத்து ஏன் ஆடுது
உன் பொன் உடம்பு ஏன் வாடுது
பூங்கலுத்து ஏன் ஆடுது
உன் பொன் உடம்பு ஏன் வாடுது

ஆண் : ஆத்துல அன்னக்கிளி
தேச்சு நீ மஞ்ச குளி
ஆத்துல அன்னக்கிளி
தேச்சு நீ மஞ்ச குளி

அடி பந்தத்திலே தொங்குகிற

பாடகர்கள் : மனோ
பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம்
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகர் : மனோ இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : அடி பந்தத்திலே தொங்குகிற
புடலங்காய்க்கு கல்ல கட்டும்
ஊரு இது
யம்மா யம்மா ஊரு இது

ஆண் : அடி தொங்குகிற
காய்க்கு எல்லாம்
கல்ல கட்ட முடியுமாடி
யக்கா யக்கா

குழு : பொட்டி கடை யக்கா யக்கா

ஆண் : அடி சிங்காரம்மா
சிணுக்கி சிணுக்கி
ஒய்யாரமா நடைய கட்டும்
யக்கா யக்கா

குழு : பொட்டி கடை யக்கா யக்கா

ஆண் : உன் பொட்டிக்கடை உள்ளிருக்கு
டப்பா டப்பா நெளிஞ்ச டப்பா
யக்கா யக்கா

குழு : பொட்டி கடை யக்கா யக்கா

குழு : உன் பொட்டிக்கடை உள்ளிருக்கு
டப்பா டப்பா நெளிஞ்ச டப்பா
யக்கா யக்கா
பொட்டி கடை யக்கா யக்கா

ஆண் : ஹான்

ஆண் : அட பொம்பளைங்க போகயில
நிழல பார்த்து
மல்லு கட்டும் ஊரு இது
யம்மா யம்மா ஊரு இது

ஆண் : அந்த நிழலுக்கெல்லாம்
புடவ கட்டி
ஆடவைக்க முடியுமாடி
யக்கா யக்கா

குழு : பொட்டி கடை யக்கா யக்கா

ஆண் : உன் பொட்டிக்கடை உள்ளிருக்கு
டப்பா டப்பா நெளிஞ்ச டப்பா
யக்கா யக்கா

குழு : பொட்டி கடை யக்கா யக்கா

ஆண் : ஹான்

குழு : உன் பொட்டிக்கடை உள்ளிருக்கு
டப்பா டப்பா நெளிஞ்ச டப்பா
யக்கா யக்கா

குழு : பொட்டி கடை யக்கா யக்கா

ஆண் : எக்கோ

ஆண் : எக்கா எக்கா
ஜும்தலக்கா
ஜும்தலக்கா
அடி எக்கா எக்கா
ஜும்தலக்கா
ஜும்தலக்கா

ஆண் : எக்கா
ஜும்தலக்கா

குழு : எக்கோவ்
ஜும்தலக்கா

குழு : எக்கோவ்

ஆண் : எத்தனையோ கம்ப நட்டு
பந்தல் இட்டு கொடி வளர்த்தா
எவ்வளவோ காய் கிடைக்கும்
மனுஷனுக்கு
அது ஏழை வயத்து பசிய
தீர்க்கும் பலன் கொடுக்கும்

ஆண் : எத்தனையோ கம்ப நட்டு
எத்தனையோ கொடி பறந்தா
கட்சி வரும் கழகம் வரும்
நாட்டுக்குள்ளே
அத காணும் போது கலக்கம்
வரும் வீட்டுக்குள்ளே

ஆண் : அட அந்த கொடி வேணுமா
இந்த கொடி வேணுமா

குழு : எக்கா எக்கா
பொட்டி கடை யக்கா யக்கா

ஆண் : ஹான் உன் பொட்டிக்கடை உள்ளிருக்கு
வளஞ்ச டப்பா நெளிஞ்ச டப்பா

குழு : யக்கா யக்கா
பொட்டி கடை யக்கா யக்கா

ஆண் : அடி பந்தத்திலே தொங்குகிற
புடலங்காய்க்கு கல்ல கட்டும்
ஊரு இது
யம்மா யம்மா ஊரு இது

ஆண் : அடி தொங்குகிற
காய்க்கு எல்லாம்
கல்ல கட்ட முடியுமாடி

குழு : யக்கா யக்கா
பொட்டி கடை யக்கா யக்கா

ஆண் : அடி சிங்காரம்மா
சிணுக்கி சிணுக்கி
ஒய்யாரமா நடைய கட்டும்

குழு : யக்கா யக்கா
பொட்டி கடை யக்கா யக்கா

ஆண் : உன் பொட்டிக்கடை உள்ளிருக்கு
டப்பா டப்பா நெளிஞ்ச டப்பா

குழு : யக்கா யக்கா
பொட்டி கடை யக்கா யக்கா

ஆண் : எக்கோ

குழு : யக்கா யக்கா
பொட்டி கடை யக்கா யக்கா….
எக்கோஓஒ…ஹோ

கொஞ்சி கொஞ்சி (Female)

பாடகர்கள் : கே. எஸ். சித்ரா
பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம்
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகி : கே. எஸ் . சித்ரா இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்

பெண் : கொஞ்சி கொஞ்சி
அலைகள் ஓட
கோடை தென்றல் மலர்கள் ஆட
கொஞ்சி கொஞ்சி
அலைகள் ஓட
கோடை தென்றல் மலர்கள் ஆட
காற்றிலே பரவும் ஒலிகள்
கனவிலே மிதக்கும் விழிகள்
கண்டேன் அன்பே அன்பே

பெண் : ஓ அன்பில் வந்த ராகமே
அன்னை தந்த கீதமே
அன்பில் வந்த ராகமே
அன்னை தந்த கீதமே
என்றும் உன்னை பாடுவேன்
மனதில் இன்ப தேனும் ஊறும்

பெண் : கொஞ்சி கொஞ்சி
அலைகள் ஓட
கோடை தென்றல் மலர்கள் ஆட
கொஞ்சி கொஞ்சி
அலைகள் ஓட
கோடை தென்றல் மலர்கள் ஆட

கொஞ்சி கொஞ்சி (Male)

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம்
பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம்
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : கொஞ்சி கொஞ்சி
அலைகள் ஓட கோடை
தென்றல் மலர்கள் ஆட

ஆண் : கொஞ்சி கொஞ்சி
அலைகள் ஓட கோடை
தென்றல் மலர்கள் ஆட
காற்றிலே பரவும் ஒலிகள்
கனவிலே மிதக்கும் விழிகள்
கண்டேன் அன்பே அன்பே

ஆண் : ஓ அன்பில் வந்த
ராகமே அன்னை தந்த
கீதமே

ஆண் : அன்பில் வந்த
ராகமே அன்னை தந்த
கீதமே என்றும் உன்னை
பாடுவேன் மனதில் இன்ப
தேனும் ஊறும்

ஆண் : கொஞ்சி கொஞ்சி
அலைகள் ஓட கோடை
தென்றல் மலர்கள் ஆட
கொஞ்சி கொஞ்சி அலைகள்
ஓட

ஆண் : மாங்குயில்
கூவுது மாமரம் பூக்குது
மேகம் வந்து தாலாட்ட
பொன் மயில் ஆடுது
வெண்பனி தூவுது
பூமி எங்கும் சீராட்ட

ஆண் : ஆலம் விழுது
ஆட அதில் ஆசை ஊஞ்சலாட
ஆலம் விழுது ஆட அதில்
ஆசை ஊஞ்சலாட
அன்னங்களின் ஊர்வலம்
ச க ரி ம க ம ம த ப நி ட ச
ரி நி நி சுவரங்களின் தோரணம்
எங்கெங்கும் பாடுது காதல் கீதங்களே

ஆண் : கொஞ்சி கொஞ்சி
அலைகள் ஓட கோடை
தென்றல் மலர்கள் ஆட
கொஞ்சி கொஞ்சி அலைகள்
ஓட

ஆண் : மாதவன் பூங்குழல்
மந்திர கீதத்தில் மாதர்
தம்மை மறந்தாட ஆதவன்
கரங்களின் ஆதரவால்
பொன்னே ஆற்றில் பொன்
போல் அலையாட

ஆண் : காலை பனியில்
ரோஜா புது கவிதை பாடி
ஆட காலை பனியில்
ரோஜா புது கவிதை பாடி
ஆட இயற்கையின் அதிசயம்
ச க ரி ம க ம ம த ப நி ட ச
ரி நி நி வானவில் ஓவியம்
எங்கெங்கும் பாடுது காதல்
கீதங்களே

ஆண் : கொஞ்சி கொஞ்சி
அலைகள் ஓட கோடை
தென்றல் மலர்கள் ஆட

ஆண் : கொஞ்சி கொஞ்சி
அலைகள் ஓட கோடை
தென்றல் மலர்கள் ஆட
காற்றிலே பரவும் ஒலிகள்
கனவிலே மிதக்கும் விழிகள்
கண்டேன் அன்பே அன்பே

ஆண் : ஓ அன்பில் வந்த
ராகமே அன்னை தந்த
கீதமே

ஆண் : அன்பில் வந்த
ராகமே அன்னை தந்த
கீதமே என்றும் உன்னை
பாடுவேன் மனதில் இன்ப
தேனும் ஊறும்

ஆண் : கொஞ்சி கொஞ்சி
அலைகள் ஓட கோடை
தென்றல் மலர்கள் ஆட
கொஞ்சி கொஞ்சி அலைகள்
ஓட

குழு : { கொஞ்சி கொஞ்சி
அலைகள் ஓட கோடை
தென்றல் மலர்கள் ஆட } (4)

குழு : { கொஞ்சி கொஞ்சி
அலைகள் ஓட கோடை
தென்றல் மலர்கள் ஆட } (2)

மாடத்திலே கன்னி மாடத்திலே

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம், ஸ்வர்ணலதா
பாடலாசிரியர் : வாலி
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகி : ஸ்வர்ணலதா பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : { டிங்கு டாங் டிங்
டிங்கு டாங் டிங் } (2)

ஆண் : மாடத்திலே
கன்னி மாடத்திலே
ஆனிப் பொண்ணு
ஐயர் ஆத்துப் பொண்ணு

பெண் : கூடத்திலே
நடு கூடத்திலே
ராஜா போல ஐயர்
ஆத்து பிள்ளே

ஆண் : மாமி சின்ன
மாமி மடிசார் அழகி
வாடி சிவகாமி

குழு : டிங்கு டாங் டிங்
டிங்கு டாங் டிங்

ஆண் : மாடத்திலே
கன்னி மாடத்திலே
ஆனிப் பொண்ணு
ஐயர் ஆத்துப் பொண்ணு

பெண் : கூடத்திலே
நடு கூடத்திலே
ராஜா போல ஐயர்
ஆத்து பிள்ளே

ஆண் : மாமி சின்ன
மாமி மடிசார் அழகி
வாடி சிவகாமி

குழு : டிங்கு டாங் டிங்
டிங்கு டாங் டிங்

ஆண் : மாடத்திலே
கன்னி மாடத்திலே
ஆனிப் பொண்ணு
ஐயர் ஆத்துப் பொண்ணு

குழு : டிங்கு டாங் டிங்
டிங்கு டாங் டிங்

குழு : மாமா என்னை
சிக்கலாமா ஓ ஹோ
மாமி காத்திருக்கலாமா
ஓ ஹோ

குழு : டிங்கு டாங் டிங்
டிங்கு டாங் டிங்

ஆண் : டாலடிக்கிற
நல்ல வைர அட்டி
போலிருக்கிற நீதான்
ரொம்ப சுட்டி ஆஹா
ஓஹோ ஹே ஹேஹே

பெண் : ஆசை வைக்கிறேள்
இப்போ ரொம்ப நன்னா
மாலையிட்டதும் மாறக்
கூடாதுன்னா

ஆண் : பூ நூலு சாட்சி
பொம்னாட்டி ஆட்சி
ஸ்ரீ கிருஷ்ணன் நான்
அல்லடி

பெண் : இப்போது பாப்பேள்
என் பேச்ச கேட்பேள்
பின்னாடி என்னாவேளோ

ஆண் : ஆன போதும்
இங்கு ஆத்துக்காரி
ரொம்ப கண்ட்ரோல்
பண்ணா கண்ட்ரோல்
ஆகாதடி

குழு : டிங்கு டாங் டிங்
டிங்கு டாங் டிங்

ஆண் : மாடத்திலே
கன்னி மாடத்திலே
ஆனிப் பொண்ணு
ஐயர் ஆத்துப் பொண்ணு

பெண் : கூடத்திலே
நடு கூடத்திலே
ராஜா போல ஐயர்
ஆத்து பிள்ளே

ஆண் : மாமி சின்ன
மாமி மடிசார் அழகி
வாடி சிவகாமி வாடின்னா

குழு : டிங்கு டாங் டிங்
டிங்கு டாங் டிங்

ஆண் : மாடத்திலே
கன்னி மாடத்திலே
ஆனிப் பொண்ணு
ஐயர் ஆத்துப் பொண்ணு

குழு : ஹ்ம்ம் ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம் ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ

ஆண் : அட்ஜஸ் பண்ணி
கூட நீ இருப்பியோ
அடங்காத அலமு போல்
இருப்பியோ ஆஹா ஹோ
ஹோ ஹாஹா

பெண் : சட்ட திட்டம்
தான் கையில் வச்சிருப்பேளா
ஃபாலோ பண்லேனா நீங்க
என்ன நச்சரிப்பேளா

ஆண் : மதியான நேரம்
பாய் போட சொன்னா
மாட்டேன்னு சொல்லுவியோ

பெண் : மாட்டேன்னு
சொன்னா சும்மாவா
விடுவேள் மேட்னி ஷோ
கூப்பிடுவேள் ஏன்னா

ஆண் : நாளை சங்கதி
நாளை பார்க்கலாம்
மானே இப்போ வாடி
அணைச்சுக்கலாம்

குழு : டிங்கு டாங் டிங்
டிங்கு டாங் டிங்

ஆண் : மாடத்திலே
கன்னி மாடத்திலே
ஆனிப் பொண்ணு
ஐயர் ஆத்துப் பொண்ணு

பெண் : கூடத்திலே
நடு கூடத்திலே
ராஜா போல ஐயர்
ஆத்து பிள்ளே

ஆண் : மாமி சின்ன
மாமி மடிசார் அழகி
வாடி சிவகாமி

குழு : டிங்கு டாங் டிங்
டிங்கு டாங் டிங்

ஆண் : மாடத்திலே
கன்னி மாடத்திலே
ஆனிப் பொண்ணு
ஐயர் ஆத்துப் பொண்ணு

பெண் : கூடத்திலே
நடு கூடத்திலே
ராஜா போல ஐயர்
ஆத்து பிள்ளே

மலை கோவில்

பாடகர்கள் : மனோ, ஸ்வர்ணலதா
பாடலாசிரியர் : வாலி
இசையமைப்பாளர் : Ilaiyaraja
பாடகி : ஸ்வர்ணலதா பாடகர் : மனோ இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஓஹோ
ஓஓஓஓஓஹோ

குழு : ஓஓஓஓஓ
ஓஓஓஓஓ ஓஓஓஓஓ

பெண் : மலை கோவில்
வாசலில் கார்த்திகை தீபம்
மின்னுதே விளக்கேற்றும்
வேளையில் ஆனந்த கானம்
சொல்லுதே

குழு : { முத்து முத்து
சுடரே சுடரே கொடு
வேண்டிடும் வரங்களையே
வண்ண வண்ண கதிரே கதிரே
தொடு ஆயிரம் சுகங்களையே } (2)

ஆண் : மலை கோவில்
வாசலில் கார்த்திகை தீபம்
மின்னுதே விளக்கேற்றும்
வேளையில் ஆனந்த கானம்
சொல்லுதே

குழு : ஓ ஓ

பெண் : நாடகம் ஆடிய
பாடகன் ஓ நீ இன்று நான்
தொடும் காதலன் ஓ

ஆண் : நீ சொல்ல
நான் மெல்ல மாறினேன்
நன்றியை வாய் விட்டு
கூறினேன்

பெண் : தேர் அழகும்
சின்ன பேர் அழகும்
உன்னை சேராதா
உடன் வாராதா

ஆண் : மான் அழகும்
கெண்டை மீன் அழகும்
கண்கள் காட்டாதா
இசை கூட்டாதா

பெண் : பாலாடை
இவன் மேலாட
வண்ண நூலாடை
இனி நீயாகும்

ஆண் : மலை கோவில்
வாசலில் கார்த்திகை தீபம்
மின்னுதே விளக்கேற்றும்
வேளையில் ஆனந்த கானம்
சொல்லுதே

குழு : முத்து முத்து
சுடரே சுடரே கொடு
வேண்டிடும் வரங்களையே
வண்ண வண்ண கதிரே கதிரே
தொடு ஆயிரம் சுகங்களையே

பெண் : மலை கோவில்
வாசலில் கார்த்திகை தீபம்
மின்னுதே

ஆண் : நான் ஒரு
பூச்சரம் ஆகவோ ஓ
நீள் குழல் மீதினில்
ஆடவோ ஓ

பெண் : நான் ஒரு
மெல்லிசை ஆகவோ
நாளும் உன் நாவினில்
ஆடவோ

ஆண் : நான் படிக்கும்
தமிழ் கீர்த்தனங்கள்
இங்கு நாள் தோறும்
உந்தன் சீர் பாடும்

பெண் : பூ மரத்தில்
பசும் பொன் நிறத்தில்
வளை பூத்தாடும் உந்தன்
பேர் பாடும்

ஆண் : மா கோலம்
மழை நீர் கோலம்
வண்ண நாள் காணும்
இந்த ஊர்கோலம்

பெண் : மலை கோவில்
வாசலில் கார்த்திகை
தீபம் மின்னுதே

ஆண் : விளக்கேற்றும்
வேளையில் ஆனந்த
கானம் சொல்லுதே

குழு : { முத்து முத்து
சுடரே சுடரே கொடு
வேண்டிடும் வரங்களையே
வண்ண வண்ண கதிரே கதிரே
தொடு ஆயிரம் சுகங்களையே } (2) ஆண் &

பெண் : மலை கோவில்
வாசலில் கார்த்திகை தீபம்
மின்னுதே விளக்கேற்றும்
வேளையில் ஆனந்த கானம்
சொல்லுதே

முந்தி முந்தி

பாடகர்கள் : மனோ
பாடலாசிரியர் : வாலி
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகர் : மனோ இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : முந்தி முந்தி
விநாயகரே
வந்து வந்தெம்மை
கண் பாருமே

ஆண் : முந்தி முந்தி
விநாயகரே
வந்து வந்தெம்மை
கண் பாருமே

ஆண் : முப்பத்து
முக்கோடி தேவர்களே
முப்பத்து முக்கோடி
தேவர்களே
எப்போதும் உன் துணை
வேண்டுமையா

ஆண் : முந்தி முந்தி
விநாயகரே
வந்து வந்தெம்மை
கண் பாருமே

ஆண் : முப்பத்து
முக்கோடி தேவர்களே
முப்பத்து முக்கோடி
தேவர்களே
எப்போதும் உன் துணை
வேண்டுமையா

ஆண் : முந்தி முந்தி
விநாயகரே
வந்து வந்தெம்மை
கண் பாருமே

பட்டு பூ பூ

பாடகர்கள் : கே. எஸ். சித்ரா
பாடலாசிரியர் : வாலி
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : பட்டு பூ பூ
பட்டு பட்டான பூ பூ
கட்டு கோப்பு
உடல் கட்டான கோப்பு

பெண் : பட்டு பூ பூ
பட்டு பட்டான பூ பூ
கட்டு கோப்பு
உடல் கட்டான கோப்பு

பெண் : சத்திரம்
வெண் சித்திரம்
நட்சத்திரம் தோற்றிடும்
முத்தாரபூ பூ பூ

குழு : பட்டு பூ பூ
பட்டு பட்டான பூ பூ
கட்டு கோப்பு
உடல் கட்டான கோப்பு
பட்டு பூ பூ
பட்டு பட்டான பூ பூ

குழு : 1 2 3 4
Let the music play
When i move my body sway
Up down right around
Feel the rhythm on the ground
1 2 3 4
Swing to the left and
Swing to the right
Lets do hands move
To the music in the grove
1 & 2 & 3 & 4

குழு : ………………………..

பெண் : வாச பூ சரம்
வண்ண பால் குடம்
தேகம் நோகாத
வாழும் பெண்மையை
சூடும் மென்மையை
தென்றல் பாடாதா

பெண் : பார்க்கும் பார்வைகள்

குழு : தாலாட்ட வேண்டும்

பெண் : காதல் வார்த்தைகள்

குழு : நம்மாலே தோன்றும்

பெண் : போடும் போட்டியில்
எட்டு திக்கிலும்
பேர் சொல்லி பூ சூடலாம்

பெண் : பட்டு பூ பூ
பட்டு பட்டான பூ பூ
கட்டு கோப்பு
உடல் கட்டான கோப்பு

பெண் : பட்டு பூ பூ
பட்டு பட்டான பூ பூ
கட்டு கோப்பு
உடல் கட்டான கோப்பு

பெண் : சத்திரம்
வெண் சித்திரம்
நட்சத்திரம் தோற்றிடும்
முத்தாரபூ பூ பூ

குழு : பட்டு பூ பூ
பட்டு பட்டான பூ பூ
கட்டு கோப்பு
உடல் கட்டான கோப்பு
பட்டு பூ பூ
பட்டு பட்டான பூ பூ

திருமகள் உன்

பாடகர்கள் : Arun Mozhi
பாடலாசிரியர் : Isaignani Ilayaraja
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகர் : அருண் மொழி இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : அஆஹா…ஆஅ…
ஆஆஹா…ஆஅ

ஆண் : திருமகள் உன்
முகம் காண வேண்டும்
உன் வரவால் எம்
நலம் ஓங்க வேண்டும்…ம்ம்…

ஆண் : திருமகள் உன்
முகம் காண வேண்டும்
உன் வரவால் எம்
நலம் ஓங்க வேண்டும்…ம்ம்…

ஆண் : திருமகள் உன்
முகம் காண வேண்டும்
அஆஹா…ஆஅ…

ஆண் : ஒரு துன்பம் நெருங்காமல்
ஓஒ…ட
வரும் இன்பம் நற்செல்வங்கள்
கூ..ட

ஆண் : ஒரு துன்பம் நெருங்காமல்
ஓஒ…ட
வரும் இன்பம் நற்செல்வங்கள்
கூ..ட…ஆ

ஆண் : திருமகள் உன்
முகம் காண வேண்டும்
உன் வரவால் எம்
நலம் ஓங்க வேண்டும்…ம்ம்…

ஆண் : திருமகள் உன்
முகம் காண வேண்டும்…
க ம தநி ச
நி த ம தநி ச

வாடி வெத்தல பாக்கு

பாடகர்கள் : மனோ, கே. எஸ். சித்ரா
பாடலாசிரியர் : வாலி
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : வாடி வெத்தல பாக்கு
வாங்கித் தாரேன் நீயும் போட்டுக்கோ
உதட்டில் செகப்பு பத்தலயின்னா
சுண்ணாம்பச் சரியாக சேர்த்துக்கோ

பெண் : வாயா வெத்தல பாக்கு
வாங்கித் தாரேன் நீயும் போட்டுக்கோ
உதட்டில் செகப்பு பத்தலயின்னா
சுண்ணாம்பச் சரியாக சேர்த்துக்கோ

ஆண் : முந்தி போட்டு கொஞ்சுற போது
பந்தி ஒண்ணு வைக்க வேணும்

பெண் : அந்தியில கொஞ்சுற கொஞ்சல்
சுந்தரிக்கு முந்திரி பந்தல்

ஆண் : எடம் பாத்து
அடிச்சாக்கா கண்ணு
தகதிமி தகதிமி
தகஜுனு தோம்

பெண் : வாயா வெத்தல பாக்கு
வாங்கித் தாரேன் நீயும் போட்டுக்கோ
உதட்டில் செகப்பு பத்தலயின்னா
சுண்ணாம்பச் சரியாக சேர்த்துக்கோ

பெண் : விடவே மாட்டேன் வா மாமா

ஆண் : வரலாமா வரலாமா
வரலாமா

பெண் : அதுதான் கேட்டேன் தா மாமா

ஆண் : தரலாமா தரலாமா
தரலாமா

பெண் : ஓ ஹோ ஹோ
விடவே மாட்டேன் வா மாமா
அதுதான் கேட்டேன் தா மாமா
நடுச்சாமம் ஆனாக்கா தூக்கம் இல்ல

ஆண் : ஹா ஹோ ஹா ஹா

பெண் : நடுச்சாமம் ஆனாக்கா
தூக்கம் இல்ல
அட நீயும்தான் ஏன் என்ன கேட்கவில்லை

ஆண் : ஹா ஊத காத்து பட்டாலே

பெண் : ஹா.. கொதிக்காதா கொதிக்காதா
கொதிக்காதா

ஆண் : மாமன்காரன் தொட்டாலே

பெண் : குளிராதா குளிராதா
குளிராதா

ஆண் : ஹோ ஹோ ஹோ ஹோ
ஊதக் காத்து பட்டாலே
மாமன்காரன் தொட்டாலே
கொதிப்பேறிச் சூடேறும்
மெல்ல மெல்ல

பெண் : ஆ..ஹோ..ஹா..

ஆண் : கொதிப்பேறிச் சூடேறும்
மெல்ல மெல்ல
மனம் குஷி ஏறி கூத்தாடும்
சொல்லச் சொல்ல

பெண் : எடம் பாத்து
அடிச்சாக்கா கண்ணு
தகதிமி தகதிமி
தகஜுனு தோம்

ஆண் : ஹா ஆஹா

ஆண் : வாடி வெத்தல பாக்கு
வாங்கித் தாரேன் நீயும் போட்டுக்கோ
உதட்டில் செகப்பு பத்தலயின்னா
சுண்ணாம்பச் சரியாக சேர்த்துக்கோ

ஆண் : புதுசா சுட்ட பணியாரம்

பெண் : ஆ எடுத்துக்கோ எடுத்துக்கோ
எடுத்துக்கோ

ஆண் : கடிச்சா கொஞ்சம் பசியாறும்

பெண் : ஆ கடிச்சுக்கோ கடிச்சுக்கோ
கடிச்சுக்கோ

ஆண் : ஹோ ஹோ ஹோ
புதுசா சுட்ட பணியாரம்
கடிச்சா கொஞ்சம் பசியாறும்
சுட சுட இப்பவே தந்திடணும்

பெண் : ஹோ ஹோ
சுட சுட இப்பவே தந்திடணும்
கை பட பட பக்கதில் வந்திடனும்

பெண் : ஆ ஹோ ஹோ
வெடலப் பொண்ணு இடுப்பத் தான்

ஆண் : ஹான் வளைக்கட்டா வளைக்கட்டா
வளைக்கட்டா

பெண் : உரசி கொஞ்சம் கை வச்சு

ஆண் : ஆ புடிக்கட்டா புடிக்கட்டா
புடிக்கட்டா

பெண் : ஹோ ஹோ ஹோ ஹோ
வெடலப் பொண்ணு இடுப்பத் தான்
உரசி கொஞ்சம் கை வச்சு
வலிக்காம தேனள்ளி குடிச்சுக்கோய்யா

ஆண் : ஆ ஹோ ஹோ

பெண் : வலிக்காம தேனள்ளி
குடிச்சுக்கோய்யா
மிச்ச விஷயத்த ஒழுங்காக
முடிச்சுக்கோய்யா

ஆண் : எடம் பாத்து
அடிச்சாக்கா கண்ணு
தகதிமி தகதிமி
தகஜுனு தோம்

பெண் : வாயா வெத்தல பாக்கு
வாங்கித் தாரேன் நீயும் போட்டுக்கோ
உதட்டில் செகப்பு பத்தலயின்னா
சுண்ணாம்பச் சரியாக சேர்த்துக்கோ

ஆண் : முந்தி போட்டு கொஞ்சுற போது
பந்தி ஒண்ணு வைக்க வேணும்

பெண் : அந்தியில கொஞ்சுற கொஞ்சல்
சுந்தரிக்கு முந்திரி பந்தல்

ஆண் : எடம் பாத்து
அடிச்சாக்கா கண்ணு
தகதிமி தகதிமி
தகஜுனு தோம்

ஆண் : வாடி வெத்தல பாக்கு
வாங்கித் தாரேன் நீயும் போட்டுக்கோ
உதட்டில் செகப்பு பத்தலயின்னா
சுண்ணாம்பச் சரியாக சேர்த்துக்கோ