Adutha Varisu

Rajinikanth Adutha Varisu

ஆசை நூறு

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன்
பாடலாசிரியர் : No Information
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : { ஆசை நூறு
வகை வாழ்வில் நூறு
சுவை வா போதும் போதும்
என போதை சேர்ந்து வர வா } (2)

ஆண் : தினம் ஆடிப்
பாடலாம் பல ஜோடி
சேரலாம்
{ மனம் போல்
வா கொண்டாடலாம் } (2)

ஆண் : ஹே ஆசை நூறு
வகை வாழ்வில் நூறு
சுவை வா போதும் போதும்
என போதை சேர்ந்து வர வா

ஆண் : முத்து ரதம்
போலே சுற்றி வரும்
பெண்கள் முத்தமழை
தேனாக ஆ ஆ ஹா

ஆண் : வந்த வரை
லாபம் கொண்ட
வரை மோகம்
உள்ளவரை நீயாடு

ஆண் : ஆஹா
பெண்கள் நாலு
வகை இன்பம்
நூறு வகை வா
வா ஆஹா
பெண்கள் நாலு
வகை இன்பம்
நூறு வகை வா

ஆண் : தினம் நீயே
செண்டாகவே அங்கு
நான்தான் வண்டாகுவேன்

ஆண் : ஹே ஆசை நூறு
வகை வாழ்வில் நூறு
சுவை வா

ஆண் : தினம் ஆடிப்
பாடலாம் பல ஜோடி
சேரலாம்
{ மனம் போல்
வா கொண்டாடலாம் } (2)

ஆண் : ஹே ஆசை நூறு
வகை வாழ்வில் நூறு
சுவை வா

ஆண் : என்ன சுகம்
தேவை எந்த விதம்
தேவை சொல்லித்தர
நானுண்டு

ஆண் : ஹே பள்ளியிலே
கொஞ்சம் பஞ்சணையில்
கொஞ்சம் அள்ளித்தர
நீயுண்டு

ஆண் : அந்த சொர்க்கம்
மண்ணில் வரும் சொந்தம்
கண்ணில் வரும் வா வா
அந்த சொர்க்கம்
மண்ணில் வரும் சொந்தம்
கண்ணில் வரும் வா

ஆண் : தினம் நீயே
செண்டாகவே அங்கு
நான்தான் வண்டாகுவேன்

ஆண் : { ஆசை நூறு
வகை வாழ்வில் நூறு
சுவை வா போதும் போதும்
என போதை சேர்ந்து வர வா } (2)

ஆண் : தினம் ஆடிப்
பாடலாம் பல ஜோடி
சேரலாம்
{ மனம் போல்
வா கொண்டாடலாம் } (2)

ஆண் : ஹே ஆசை நூறு
வகை வாழ்வில் நூறு
சுவை வா போதும் போதும்
என போதை சேர்ந்து வர வா

ஆண் : தினம் ஆடிப்
பாடலாம் பல ஜோடி
சேரலாம்
{ மனம் போல்
வா கொண்டாடலாம் } (2)

ஆண் : ஹே ஆசை நூறு
வகை வாழ்வில் நூறு
சுவை வா போதும் போதும்
என போதை சேர்ந்து வர வா
வா வா வா

ஏனய்யா…. ஏ பி சி

பாடகர்கள் : எஸ். ஜானகி
பாடலாசிரியர் : வாலி
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகி : எஸ் ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஏனய்யா…. ஏ பி சி
எல்லாமே நீ வாசி

பெண் : ஏனய்யா…. ஏ பி சி
எல்லாமே நீ வாசி
நான் படிக்க நினச்சது
பள்ளியறையில் இருக்குது
போதும் இந்தப் பாடம்
அந்தப் பாடம் சொல்லய்யா

பெண் : போதும் இந்தப் பாடம்
அந்தப் பாடம் சொல்லய்யா
ஏனய்யா ஏ பி சி
எல்லாமே நீ வாசி…….

பெண் : நான் படிக்க நினச்சது
பள்ளியறையில் இருக்குது
போதும் இந்தப் பாடம்
அந்தப் பாடம் சொல்லய்யா
ஹேய் போதும் இந்தப் பாடம்
லா லாலா லாலா ஆ…

பெண் : {கட்டழகுக் காளை
கிட்ட வரும் வேளை
கன்னி மயில் மாலை
போடக் காட்டு உந்தன் தோளை} (2)

பெண் : வண்டைத் தேடி பூவு
வந்ததுண்டோ கூறு
உன்னைத் தேடி நான்தான்
வந்திருக்கேன் பாரு….
தொட்டுத் தொட்டு நானும்
நீயும் ஜோடி சேரத்தான்

பெண் : ஏனய்யா…. ஏ பி சி
எல்லாமே நீ வாசி
நான் படிக்க நினச்சது
பள்ளியறையில் இருக்குது
போதும் இந்தப் பாடம்
அந்தப் பாடம் சொல்லய்யா
ஹோ… போதும் இந்தப் பாடம்
அந்தப் பாடம் சொல்லய்யா

பெண் : ஏனய்யா…. ஏ பி சி
எல்லாமே நீ வாசி…

பெண் : {தெப்பக்குளம் மேலே
செங்கமலம் போலே
உன் மடியில் நானும்
வந்து ஆடவேணும் மாமா} (2)

பெண் : கண்ணுப்பட்ட தேகம்
புண்ணுப்பட்ட நேரம்
பொண்ணுப்பட்ட பாடு
என்ன சொல்லக்கூடும்
மெல்ல மெல்ல சூடு ஏறும்
மேலும் சொல்லத்தான்

பெண் : ஏனய்யா…. ஏ பி சி
எல்லாமே நீ வாசி
நான் படிக்க நினச்சது
பள்ளியறையில் இருக்குது
போதும் இந்தப் பாடம்
அந்தப் பாடம் சொல்லய்யா
ஹஹா… போதும் இந்தப் பாடம்
அந்தப் பாடம் சொல்லய்யா

பெண் : ஏனய்யா…. ஏ பி சி
எல்லாமே நீ வாசி…

காவிரியே கவிக்குயிலே

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி
பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம்
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : காவிரியே கவிக்குயிலே
கண்மணியே வா வா
மனம் தாவுதடி தவிக்குதடி
தளிர்க் கொடியே வா வா

பெண் : பூங்காற்று தாலாட்ட
தாளாத மோகம்
தீராத மோகங்கள்
தீராமல் தீரும்

ஆண் : ஓ மை லவ்
யுவர் மை ஸ்வீட் ஹார்ட்

பெண் : ஓ மை லவ்
யுவர் மை ஸ்வீட் ஹார்ட்

குழு : ………………….

பெண் : இருவர் ஒருவர் எனத்தானே
உறவினில் இணைவோமே

ஆண் : பருவம் கனிந்த புதுத்தேனே
பழகிக் களிப்போமே

பெண் : உனக்கும் எனக்கும் பொருத்தம்
வளர வளர சுகமே…

ஆண் : இனிக்கும் இதழில் அமுதம்
பருக பருக சுகமே….

பெண் : ஆனந்தம்……..உல்லாசம்……..

ஆண் : வா எந்தன் பக்கத்தில்
ஐ லவ் யூ

பெண் : ஓ மை லவ்
யுவர் மை ஸ்வீட் ஹார்ட்
ஓ மை லவ்
யுவர் மை ஸ்வீட் ஹார்ட்

ஆண் : ……………………………………..

ஆண் : குளிரும் வாட்டுதடி பெண்ணே
விலகி ஓடாதே

பெண் : கொடியும் வளர்ந்து வரும்
கண்ணா படரும் கிளை நீயே

ஆண் : சிரித்து சிரித்து மயக்கும்
புதுமைப் பதுமையே வா

பெண் : அழைத்து அணைத்து வளைத்து
ரசிக்கும் ரசிகனே வா

ஆண் : ஆனந்தம்………..உல்லாசம்………

பெண் : வா எந்தன் பக்கத்தில்
ஐ லவ் யூ

ஆண் : ஓ மை லவ்
யுவர் மை ஸ்வீட் ஹார்ட்

பெண் : ஓ மை லவ்
யுவர் மை ஸ்வீட் ஹார்ட்

ஆண் : காவிரியே கவிக்குயிலே
கண்மணியே வா வா
மனம் தாவுதடி தவிக்குதடி
தளிர்க் கொடியே வா வா

பெண் : பூங்காற்று தாலாட்ட
தாளாத மோகம்
தீராத மோகங்கள்
தீராமல் தீரும்

ஆண் : ஓ மை லவ்
யுவர் மை ஸ்வீட் ஹார்ட்
ஆண் மற்றும்

பெண் :
ஓ மை லவ்
யுவர் மை ஸ்வீட் ஹார்ட்

பேசக் கூடாது

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா
பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம்
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகி : பி.சுஷீலா பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : பேசக் கூடாது

ஆண் : பேசக் கூடாது
வெறும் பேச்சில் சுகம்
ஹோய் ஏதும் இல்லை
பேதம் இல்லை லீலைகள்
காண்போமே

பெண் : ஆசை கூடாது
மணமாலை தந்து ஹோய்
சொந்தம் கொண்டு மஞ்சம்
கண்டு லீலைகள் காண்போமே

பெண் : ஆசைக் கூடாது

ஆண் : பார்க்கும்
பார்வை நீ என்
வாழ்வும் நீ என்
கவிதை நீ பாடும்
ராகம் நீ என் நாதம்
நீ என் உயிரும் நீ

பெண் : காலம்
யாவும் நான் உன்
சொந்தம் காக்கும்
தெய்வம் நீ பாலிலாடும்
மேனி எங்கும் கொஞ்சும்
செல்வம் நீ

ஆண் : இடையோடு
கனி ஆட தடை
போட்டால் நியாயமா
உன்னாலே பசி தூக்கம்
இல்லை எப்போதும்
நெஞ்சுக்குள் தொல்லை
இனி மேலும் ஏன் இந்த
எல்லை

பெண் : ஆசை கூடாது
மணமாலை தந்து ஹோய்
சொந்தம் கொண்டு மஞ்சம்
கண்டு லீலைகள் காண்போமே

ஆண் : பேசக் கூடாது

பெண் : …………………….

ஆண் : …………………….

ஆண் : காலைப் பனியும்
நீ கண்மணியும் நீ என்
கனவும் நீ மாலை மயக்கம்
நீ பொன் மலரும் நீ என்
நினைவும் நீ

பெண் : ஊஞ்சல் ஆடும்
பருவம் உண்டு உரிமை
தர வேண்டும் நூலில்
ஆடும் இடையும் உண்டு
நாளும் வர வேண்டும்

ஆண் : பல காலம்
உனக்காக மனம் ஏங்கி
வாடுதே வருகின்ற தை
மாதம் சொந்தம் அணிகின்ற
மணிமாலை பந்தம்
இரவோடும் பகலோடும்
இன்பம்

பெண் : ஆசை கூடாது
மணமாலை தந்து ஹோய்
சொந்தம் கொண்டு மஞ்சம்
கண்டு லீலைகள் காண்போமே

ஆண் : பேசக் கூடாது
வெறும் பேச்சில் சுகம்
ஹோய் ஏதும் இல்லை
பேதம் இல்லை லீலைகள்
காண்போமே ஆண் &

பெண் : ………………….

வா ராசா வந்து பாரு

பாடகர்கள் : எஸ். ஜானகி
பாடலாசிரியர் : வாலி
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகி : ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : வா ராசா வந்து பாரு
வா ராசா வந்து பாரு
வந்தாலே கிளுகிளுப்பு
வட்ட முகம் பளபளப்பு
ஒய்யாரி என் வனப்பு
உண்டாக்கும் புல்லரிப்பு
வில்லாட்டம் உடல் வளைச்சி
நான் தான் ஆட……

பெண் : வா ராசா வந்து பாரு
வா ராசா வந்து பாரு

பெண் : வீதி நடு வீதி
வீதியில ஒரு ஜோதி
ஆணி பொண்ணாட்டம் மின்ன….
சேதி புது சேதி
ஜாடையில ஒரு பாதி
ஓரக் கண்ணாலே சொல்லு…

பெண் : மூடும் தாவணி முத்து
பந்தல் போலாட
பாடும் லாவணி சிந்து
ஒண்ணு நான் பாட
உன்னாசை என்னை மயக்க
என்னாசை உன்னை இழுக்க
ஆட்டம் பாட்டம் பாத்தா சுகம் தான்

பெண் : வா ராசா வா ராசா வா ராசா….
வா ராசா வந்து பாரு
வா ராசா வந்து பாரு
வந்தாலே கிளுகிளுப்பு
வட்ட முகம் பளபளப்பு
ஒய்யாரி என் வனப்பு
உண்டாக்கும் புல்லரிப்பு
வில்லாட்டம் உடல் வளைச்சி
நான் தான் ஆட……

பெண் : வா ராசா வந்து பாரு
வா ராசா வந்து பாரு

பெண் : ஆட்டம் என்னாட்டம்
அம்மன் கோவில் தேராட்டம்
கூட்டம் ஏராளம் கூடும்
தாளம் கைத்தாளம்
தட்டுறதுதான் அடையாளம்
யாரும் பாராட்டு கூறு

பெண் : தாவும் பைங்கிளி
தத்தி தத்தி வந்தாட
குலுங்கும் மாங்கனி
முன்னும் பின்னும் தள்ளாட
எல்லாரும் கண்டு ரசிக்க
பொல்லாத எண்ணம் பிறக்க
ஏதோ ஏக்கம் பாடா படுத்தும்

பெண் : வா ராசா வா ராசா வா ராசா….
வா ராசா வந்து பாரு
வா ராசா வந்து பாரு
வந்தாலே கிளுகிளுப்பு
வட்ட முகம் பளபளப்பு
ஒய்யாரி என் வனப்பு
உண்டாக்கும் புல்லரிப்பு
வில்லாட்டம் உடல் வளைச்சி
நான் தான் ஆட……

பெண் : வா ராசா வந்து பாரு
வா ராசா வந்து பாரு

வாழ்க ராணி

பாடகர்கள் : எஸ். ஜானகி, எஸ். பி. சைலஜா
பாடலாசிரியர் : வாலி
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. ஷைலஜா இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ………………………

பெண் : பபா ஆ… வாழ்க ராணி
வாழ்க ராஜாங்கம்

குழு : ஆஅ ஆஅ…

பெண் : வாழ்க ராணி
வாழ்க ராஜாங்கம்

குழு : ஆஅ ஆஅ…

பெண் : வரும் காலம் நலமாகவே
திரு நாளை கொண்டாடுவோம்

குழு : ஆஅ ஆஅ…

பெண் : வரும் காலம் நலமாகவே
திரு நாளை கொண்டாடுவோம்

குழு : ஆஅ ஆஅ…

பெண் : வாழ்க ராணி
வாழ்க ராஜாங்கம் ஹே ஹேய்

குழு : ஆஅ ஆஅ…

பெண் : வாழ்க ராணி
வாழ்க ராஜாங்கம்

குழு : ஆஅ ஆஅ…

பெண் : இறைவன் போட்ட கணக்கை
மாற்ற எவராலும் ஆகாது
மறைவில் போடும் வேசம்
யாவும் நிஜமாக முடியாது

பெண் : {ஒரு நாள் காலம் மறுநாள் மாறும்
இரவே பகலும் ஆகலாம்} (2)
கண்ணோடு காணும் காட்சி
என்னாளும் கூறும் சாட்சி
இங்கு ஆசை பாசம் யாவும் கனவுகள்

பெண் : வாழ்க ராணி
வாழ்க ராஜாங்கம் தகுதகுதகுது

குழு : ஆஅ ஆஅ…

பெண் : வாழ்க ராணி
வாழ்க ராஜாங்கம்

குழு : ஆஅ ஆஅ…

பெண் : வரும் காலம் நலமாகவே
திரு நாளை கொண்டாடுவோம்

குழு : ஆஅ ஆஅ…

பெண் : வாழ்க ராணி
வாழ்க ராஜாங்கம்

குழு : ஆஅ ஆஅ..

பெண் : எனது என்று நினைக்கும்
செல்வம் கனவாக கூடாது
உனது பாதை விலகும் போது
பழி பாவம் போகாது

பெண் : {மனதில் நீதி நினைவில் நியாயம்
அன்பே செல்வம் வாழ்விலே} (2)
சொல்லாமல் போகும் செல்வம்
என்னாளும் சேரும் சொந்தம்
இது காதல் ராகம் பாடும் கனவுகள்…

குழு : வாழ்க ராணி
வாழ்க ராஜாங்கம்
ஆஅ ஆஅ…
வாழ்க ராணி
வாழ்க ராஜாங்கம்
ஆஅ ஆஅ…

குழு : வரும் காலம் நலமாகவே
திரு நாளை கொண்டாடுவோம்
ஆஅ ஆஅ…
வரும் காலம் நலமாகவே
திரு நாளை கொண்டாடுவோம்
ஆஅ ஆஅ…