Murattu Kaalai
பொதுவாக என் மனசு தங்கம்
பாடகர் : மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : இளையராஜா
குழு : ஜே…… ஜே…….
அண்ணனுக்கு ஜே
அண்ணனுக்கு ஜே
காளையனுக்கு ஜே
காளையனுக்கு ஜே
ஜே
ஆண் : பொதுவாக என்
மனசு தங்கம் ஒரு
போட்டியின்னு வந்து
விட்டா சிங்கம் பொதுவாக
என் மனசு தங்கம் ஒரு
போட்டியின்னு வந்து
விட்டா சிங்கம்
ஆண் : உண்மைய சொல்வேன்
நல்லத செய்வேன் தன்னானா
தானா தன தன்னானா தானா
வெற்றிமேல் வெற்றி வரும்
ஆண் : ஆடுவோம் பாடுவோம்
கொண்டாடுவோம் ஆ ஆனந்தம்
காணுவோம் எந்நாளுமே
குழு : ஆடுவோம் பாடுவோம்
கொண்டாடுவோம் ஆனந்தம்
காணுவோம் எந்நாளுமே
ஆண் : பொதுவாக என்
மனசு தங்கம் ஒரு
போட்டியின்னு வந்து
விட்டா சிங்கம்
ஆண் : முன்னால சீறுது
மயிலக்காளை பின்னால
பாயுது மச்சக்காளை
முன்னால சீறுது
மயிலக்காளை ஆ
பின்னால பாயுது
மச்சக்காளை
ஆண் : அடக்கி ஆளுது
முரட்டுக்காளை
குழு : முரட்டுக்காளை
முரட்டுக்காளை
ஆண் : நெஞ்சுக்குள்
பயமும் இல்ல யாருக்கும்
அச்சம் இல்ல வாராதோ
வெற்றி என்னிடம்
விளையாடுங்க உடல்
பலமாகுங்க
குழு : ஆடலாம் பாடலாம்
கொண்டாடலாம் ஹே
ஆனந்தம் காணுவோம்
எந்நாளுமே
ஆண் : பொதுவாக என்
மனசு தங்கம் ஒரு
போட்டியின்னு வந்து
விட்டா சிங்கம் உண்மைய
சொல்வேன் நல்லத செய்வேன்
ஹான் வெற்றிமேல் வெற்றி
வரும்
குழு : ஆடுவோம் பாடுவோம்
கொண்டாடுவோம் ஹா ஹா
ஆனந்தம் காணுவோம்
எந்நாளுமே
குழு : வாங்கடி வாங்கடி
பொண்டுகளா வாசம்
உள்ள செண்டுகளா
வாங்கடி வாங்கடி
பொண்டுகளா வாசம்
உள்ள செண்டுகளா
குழு : கும்மி அடிச்சு
குலவைய போட்டு
அண்ணன வாழ்த்தி
பாடுங்கள ஹோய்….
குழு : காளையன பாத்து
புட்டா ஜல்லிக்கட்டு காளை
எல்லாம் துள்ளிக்கிட்டு ஓடுமடி
புல்லுக்கட்டை தேடிக்கிட்டு
புல்லுக்கட்டை தேடிக்கிட்டு
புல்லுக்கட்டை தேடிக்கிட்டு
குழு : கொம்பிருக்கும்
காளைக்கெல்லாம்
தெம்பிருக்காது இந்த
கொம்பு இல்லா
காளையிடம்
வம்பிழுக்காது
குழு : குலவை போட்டு
பாடுங்கடி கும்மியடிச்சி
ஆடுங்கடி மாரியம்மன்
கோவிலுக்கு பொங்கலு
வைப்போம் வாருங்கடி
பொங்கலுவைப்போம்
வாருங்கடி பொங்கலு
வைப்போம் வாருங்கடி
ஆண் : பொறந்த ஊருக்கு
புகழை தேடு வளந்த
நாட்டுக்கு பெருமை
தேடு பொறந்த ஊருக்கு
புகழை தேடு வளந்த
நாட்டுக்கு பெருமை
தேடு
ஆண் : நாலுபேருக்கு
நன்மைசெய்தா
குழு : கொண்டாடுவார்
பண்பாடுவார்
ஆண் : என்னாலும்
உழைச்சதுக்கு பொன்னான
பலன் இருக்கு ஊரோட
சேர்ந்து வாழுங்க அம்மன்
அருள் சேரும் இனி நம்ம
துணையாகும்
குழு : ஆடலாம் பாடலாம்
கொண்டாடலாம் ஹே
ஆனந்தம் காணுவோம்
எந்நாளுமே
ஆண் : பொதுவாக என்
மனசு தங்கம் ஒரு
போட்டியின்னு வந்து
விட்டா சிங்கம்
ஆண் : உண்மைய சொல்வேன்
நல்லத செய்வேன் ஹா
தன்னானா தானா தன
தன்னானா தானா வெற்றி
மேல் வெற்றி வரும்
ஆண் : ஆடுவோம் பாடுவோம்
கொண்டாடுவோம் ஹே
ஆனந்தம் காணுவோம்
எந்நாளுமே ஆடுவோம்
பாடுவோம் கொண்டாடுவோம்
ஹே ஹே ஆனந்தம் காணுவோம்
எந்நாளுமே ஆடுவோம் பாடுவோம்
கொண்டாடுவோம் ஹே
ஆனந்தம் காணுவோம்
எந்நாளுமே
எந்த பூவிலும் வாசம் உண்டு
பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ……………………..
பெண் : { எந்த பூவிலும்
வாசம் உண்டு எந்த பாட்டிலும்
ராகம் உண்டு எந்தன் வாழ்விலும்
அர்த்தம் உண்டு புது உறவு
புது நினைவு
பெண் : லலலாலலா
லலலாலலா தினம்
தினம் ஆனந்தம்
ஆனந்தம் ஹே ஹே
ஹே } (2)
பெண் : பாசமென்னும்
கூடு கட்டி காவல் கொள்ள
வேண்டும் தாய் மனதின்
கருணை தந்து காத்திருக்க
வேண்டும்
பெண் : அன்னை போல்
வந்தால் என்று சிரிக்கும்
பிள்ளைகள் உள்ளம்
உன்னை வணங்கும்
பெண் : அன்பில் ஆடும்
மனமே பண்பில் வாழும்
குணமே ஒளியே திரு
மகளே புது உறவே சுகம்
பிறந்ததே
பெண் : எந்த பூவிலும்
வாசம் உண்டு எந்த பாட்டிலும்
ராகம் உண்டு எந்தன் வாழ்விலும்
அர்த்தம் உண்டு புது உறவு
புது நினைவு
பெண் : லலலாலலா
லலலாலலா தினம்
தினம் ஆனந்தம்
ஆனந்தம் ஹே ஹே
ஹே
பெண் : தஞ்சமென்று
ஓடி வந்தேன் காவல்
என்று நின்றாய் என்
மனதின் கோவிலிலே
தெய்வ மென்று வந்தாய்
பெண் : நன்றி நான்
சொல்வேன் என்றும்
விழியில் என்றும் நான்
செல்வேன் உந்தன் வழியில்
பெண் : என்னை ஆளும்
உறவே எந்த நாளும்
மறவேன் கனவே வரும்
நினைவே இனி உன்னை
நான் தினம் வாங்குவேன்
பெண் : எந்த பூவிலும்
வாசம் உண்டு எந்த பாட்டிலும்
ராகம் உண்டு எந்தன் வாழ்விலும்
அர்த்தம் உண்டு புது உறவு
புது நினைவு
பெண் : லலலாலலா
லலலாலலா தினம்
தினம் ஆனந்தம்
ஆனந்தம் ஹே ஹே
ஹே
பெண் : ……………………..
மாமன் மச்சான்
பாடகி : எஸ்.பி. சைலஜா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : மாமன் மச்சான்
ஹே நீ தானோ ஆச வச்சா
ஏன் ஆகாதோ
பெண் : வரலாமா தொடலாமா
தொடும்போது சுகம் தானா
ஆ.. மாமன் மச்சான்
பெண் : நாள் ஜாமம்
எல்லாம் உன்னைதான்
எண்ணிக்கொள்வேன்
ராத்தூக்கம் இல்ல
மனம்போல் இன்பம்
சொல்ல
பெண் : தத்தை இவ
பாக்க இரு கைகளிலே
சேர்க்க மொட்டவிழும்
நேரம் புது மோகத்திலே
வாடும்
பெண் : வாடாமல் வாழ
தோளோடு சேர நீ வந்து
பாரு ஓஓ ஹோ ஹோ
பெண் : மாமன் மச்சான்
ஹே நீ தானோ வரலாமா
தொடலாமா
பெண் : நான் பாடி பாடி
வருவேன் உன்னைதேடி
நீ கேட்டா என்ன இனி நான்
உந்தன் ஜோடி
பெண் : ரகசியத்தை சொல்வேன்
உன்னை அதிசயத்தில் வைப்பேன்
எதிரிகளை வெல்லும் ஒரு
தந்திரமும் சொல்வேன்
பெண் : நீ எந்தன் தெய்வம்
நான் உந்தன் செல்வம்
என்றென்றும் இன்பம்
ஓஓ ஹோ
பெண் : மாமன் மச்சான்
ஹே நீ தானோ ஆச வச்சா
ஏன் ஆகாதோ
பெண் : வரலாமா தொடலாமா
தொடும்போது சுகம் தானா
ஆ.. மாமன் மச்சான்
புது வண்ணங்கள்
பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ……………………..
குழு : ……………………..
பெண் : புது வண்ணங்கள்
கொஞ்சிடும் சோலை பல
எண்ணங்கள் துள்ளிடும்
வேளை எங்கும் மின்னுது
செவ்வந்தி மாலை இளந்தென்றலில்
ஆடுது சேலை
பெண் : செந்தாழம் பூவாசம்
என் நெஞ்சத்தை அள்ள
பூங்குயில் பாடுது பாட்டு
வண்ண மாமயில் ஆடுது
கேட்டு
பெண் : புது வண்ணங்கள்
கொஞ்சிடும் சோலை பல
எண்ணங்கள் துள்ளிடும்
வேளை
பெண் : மண்ணிலே வளர்ந்த
கொடி படர்ந்தது மரத்திலடி
பொன்னிலே நனைந்தது போல்
மலர்ந்தது வசந்தமடி
பெண் : பிஞ்சுகள் காய்த்து
கனிந்தாட மொட்டுகள் பூத்து
விரிந்தாட கள்ளில் மயங்கும்
வண்டுபோல் சுவை கண்டு
மயங்குது கண்விழி
பெண் : உல்லாசம்
பண்பாடி உற்சாகம்
கொண்டாட உள்ளத்தில்
பொங்குது ஆசை
பெண் : புது வண்ணங்கள்
கொஞ்சிடும் சோலை பல
எண்ணங்கள் துள்ளிடும்
வேளை எங்கும் மின்னுது
செவ்வந்தி மாலை இளந்தென்றலில்
ஆடுது சேலை
பெண் : செந்தாழம் பூவாசம்
என் நெஞ்சத்தை அள்ள
பூங்குயில் பாடுது பாட்டு
வண்ண மாமயில் ஆடுது
கேட்டு
பெண் : ……………………..
பெண் : அன்பிலே இணைந்த
சிட்டு மறைந்தது கூட்டிலடி
ரெண்டிலே ஒன்றை கண்டு
பிறந்தது நாணமடி
பெண் : இன்று நான்
மலர்ந்த பெண்ணானேன்
என்னவோ மயக்கம்
கொண்டேனே நெஞ்சில்
நினைத்ததை சொல்லவோ
அத சொல்ல தயங்குது
பெண்மையே
பெண் : ஒன்றோடு ஒன்றாக
எந்நாளும் கொண்டாட
உள்ளத்தில் வந்தது ஆசை
பெண் : புது வண்ணங்கள்
கொஞ்சிடும் சோலை பல
எண்ணங்கள் துள்ளிடும்
வேளை எங்கும் மின்னுது
செவ்வந்தி மாலை இளந்தென்றலில்
ஆடுது சேலை
பெண் : செந்தாழம் பூவாசம்
என் நெஞ்சத்தை அள்ள
பூங்குயில் பாடுது பாட்டு
வண்ண மாமயில் ஆடுது
கேட்டு
பெண் : தன நா நா நன நா நா
தன நா நா நன நா நா
தன நா நா நன நா நா
|