Naan Sigappu Manithan

Rajinikanth Naan Sigappu Manithan (1985 Film)

எல்லாருமே திருடங்கைதான்

பாடகர்கள் : இளையராஜா
பாடலாசிரியர் : வாலி
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : எல்லாருமே திருடங்கைதான்
சொல்லப்போனா குருடங்கைதான்
நம்ம நாட்டுல நடு ரோட்டுல
நம்ம நாட்டுல ரோட்டுல வீட்டுல காட்டுல

ஆண் : எல்லாருமே திருடங்கைதான்
சொல்லப்போனா குருடங்கைதான்

ஆண் : பொன்னான பாரதம்
புத்திக் கெட்டு போச்சுடா
சொன்னானே பாரதி
சொன்னதென்ன ஆச்சுடா
எல்லாரும் இந்நாட்டு……..
மன்னன் இல்ல மன்னன் இல்ல……

ஆண் : எல்லாருமே திருடங்கைதான்
சொல்லப்போனா குருடங்கைதான்

ஆண் : {பந்தலும் மேடையும் போட்டுகிறான்
ஒரு துண்டையும் தோளுல மாட்டிக்கிறான்
ஓட்டுகள் போட்டிட கேட்கிறான்
அதப் போட்டதும் புத்திய மாத்திக்கிறான்} (2)

ஆண் : எல்லாமே வேஷம்தான் ஏதேதோ கோஷம்தான்
எங்கேயும் தில்லுமுல்லு திண்டாடுது தேசம்தான்
எந்நாளும் கோழைகளா எதுக்கு வாழணும்
அப்பாவி மனுஷனெல்லாம் சிவப்பா மாறணும்
ஒருத்தனும் இங்க சித்தனும் இல்ல
புத்தனும் இல்ல ஹே…ஹே…….ஹே……

ஆண் : எல்லாருமே திருடங்கைதான்
சொல்லப்போனா குருடங்கைதான்

ஆண் : {எத்தனை எத்தனை சாமியடா
இதில் என் மதம் உன் மதம் சண்டையடா
எத்தனை எத்தனை ஜாதியடா
இதில் முட்டுது மோதுது மண்டையடா} (2)

ஆண் : கல்லான தெய்வங்கள் காணாம நின்னாச்சு
எல்லோரும் கோயில் கட்டி இங்க இப்போ என்னாச்சு
தன்னால புரிஞ்சிக்கிட்டு எல்லாரும் திருந்தணும்
இல்லாட்டி நடந்ததுக்கு பின்னால வருந்தணும்
அஞ்சுவதென்ன கெஞ்சுவதென்ன
புண்ணியமில்ல ஹே……ஹே……ஹே…..

ஆண் : எல்லாருமே திருடங்கைதான்
சொல்லப்போனா குருடங்கைதான்
நம்ம நாட்டுல நடு ரோட்டுல
நம்ம நாட்டுல ரோட்டுல வீட்டுல காட்டுல

ஆண் : எல்லாருமே திருடங்கைதான்
சொல்லப்போனா குருடங்கைதான்

ஆண் : பொன்னான பாரதம்
புத்திக் கெட்டு போச்சுடா
சொன்னானே பாரதி
சொன்னதென்ன ஆச்சுடா
எல்லாரும் இந்நாட்டு……..
மன்னன் இல்ல மன்னன் இல்ல……

ஆண் : எல்லாருமே திருடங்கைதான்
சொல்லப்போனா குருடங்கைதான்

காந்தி தேசமே காவலில்லையா

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம்
பாடலாசிரியர் : வைரமுத்து
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : காந்தி தேசமே காவலில்லையா

குழு : ஆஅ…..ஆஅ……ஆஅ….ஆ…..அ…..அ….ஆ….
ஆஅ…..ஆஅ……ஆஅ….ஆ…..அ…..அ….ஆ….

ஆண் : காந்தி தேசமே காவலில்லையா
நீதிமன்றமே நியாயம் இல்லையா
பதவியின் சிறைகளில்
பாரதமாதா பரிதவிக்கிறாள்

ஆண் : சுதந்திர தேவி சுயநலப் புலிகளின்
துணி துவைக்கிறாள் துணி துவைக்கிறாள்
தாயை மீட்க்கவா…..தர்மம் காக்கவா…….
தாயை மீட்க்கவா…..தர்மம் காக்கவா…….

குழு : ஆஹா அ…..ஆஹா அ……ஆஹா அ….
ஆஹா அ…..ஆஹா அ……ஆஹா அ….
ஆ…..அ…..அ….ஆ….ஆஅ…..

ஆண் : காந்தியும் நேருவும் வாங்கிய சுதந்திரம்
ஒரு சிலர் உரிமையில்லை
ஒரு சிலர் உரிமையில்லை

குழு : ஆ…..அ…..அ….ஆ….ஆஅ…..

ஆண் : வளமுண்டு குறைவில்லை
ஏழைக்கு நிறைவில்லை
வறுமைக்கு வறுமை இல்லை
வறுமைக்கு வறுமை இல்லை

குழு : ஆ…..அ…..அ….ஆ….ஆஅ…..

ஆண் : சாலையில் தனிமையில் அழகிய இளமயில்
நடக்கவும் முடியவில்லை
நடக்கவும் முடியவில்லை

குழு : ஆ…..அ…..அ….ஆ….ஆஅ…..

ஆண் : இளமையும் கரைந்தது இருபுறம் நரைத்தது
வேலையும் கிடைக்கவில்லை
வேலையும் கிடைக்கவில்லை

குழு : ஆ…..அ…..அ….ஆ….ஆஅ…..

ஆண் : ஜாதி என்கின்ற மாயப் பேய் ஒன்று
ரத்தம் கேட்கின்றதே
தர்மம் தப்பித்து கள்வன் கோட்டைக்குள்
தஞ்சம் கேட்கின்றதே…….

ஆண் : காந்தி தேசமே காவலில்லையா
நீதிமன்றமே நியாயம் இல்லையா

குழு : ஆஹா அ…..ஆஹா அ……ஆஹா அ….
ஆஹா அ…..ஆஹா அ……ஆஹா அ….
ஆ…..அ…..அ….ஆ….ஆஅ…..

ஆண் : இந்திய தேசத்தைக் காக்கின்ற வீரர்கள்
எல்லையில் நிறைந்திருப்பார்…..
எல்லையில் நிறைந்திருப்பார்…..

குழு : ஆ…..அ…..அ….ஆ….ஆஅ…..

ஆண் : நாட்டினைக் காசுக்குக்
காட்டியே கொடுப்பவர்
ஊருக்குள் ஒளிந்திருப்பார்…..
ஊருக்குள் ஒளிந்திருப்பார்…..

குழு : ஆ…..அ…..அ….ஆ….ஆஅ…..

ஆண் : அஹிம்சையைப் போதித்த தேசத்தில்
ரத்தத்தின் ஆறுகள் ஓடுதடா……
ரத்தத்தின் ஆறுகள் ஓடுதடா….

குழு : ஆ…..அ…..அ….ஆ….ஆஅ…..

ஆண் : ஏழையின் கூரையில் ஏற்றிய தீக்கனல்
வான் வரை ஏறுதடா…..
வான் வரை ஏறுதடா……

குழு : ஆ…..அ…..அ….ஆ….ஆஅ…..

ஆண் : விடுதலை வாங்க அன்று நாம் தந்த
விலைகள் தான் கொஞ்சமா…..
வேலியே இன்று பயிரை மேய்கின்ற
நிலைமைதான் மாறுமா……..

ஆண் : காந்தி தேசமே காவலில்லையா
நீதிமன்றமே நியாயம் இல்லையா
பதவியின் சிறைகளில்
பாரதமாதா பரிதவிக்கிறாள்

ஆண் : சுதந்திர தேவி சுயநலப் புலிகளின்
துணி துவைக்கிறாள் துணி துவைக்கிறாள்
தாயை மீட்க்கவா…..தர்மம் காக்கவா…….
தாயை மீட்க்கவா…..தர்மம் காக்கவா…….

ஆண் : காந்தி தேசமே காவலில்லையா
நீதிமன்றமே நியாயம் இல்லையா

குங்குமத்து மேனி

பாடகர்கள் : எஸ். ஜானகி
பாடலாசிரியர் : கங்கை அமரன்
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : குங்குமத்து மேனி கொள்ளையிட வா நீ
குங்குமத்து மேனி கொள்ளையிட வா நீ
இழுக்குதா அழைக்குதா இருப்பதை கொடுக்குதா
இல்லாததா வா…..நீ…….தா……ஹோய்………

பெண் : குங்குமத்து மேனி கொள்ளையிட வா நீ………
குங்குமத்து மேனி கொள்ளையிட வா நீ………

பெண் : பருவமலர் பாய் போடு பசி உறக்கம் தோணாது
பவள இதழ் நீ கூடு பகல் இரவு காணாது
இடையில் ஒரு ஆடைப்போல் ஆடு
இளமை என்ன நீ தேடு……

பெண் : ஹ இறுதி வரை ஏக்கம் கூடாது
இளைய மகள் என்னோடு
வாவென்றதே மோகம் பாராததேன் வேகம்
வாவென்றதே மோகம் பாராததேன் வேகம்
ஆனந்த ராகம்……..நீ……..பாடு……..

பெண் : குங்குமத்து மேனி கொள்ளையிட வா நீ………
குங்குமத்து மேனி கொள்ளையிட வா நீ………
இழுக்குதா அழைக்குதா இருப்பதை கொடுக்குதா
இல்லாததா வா…..நீ…….தா……ஹோய்………

பெண் : மடியில் விழ நாளேது
மலருடலும் தாங்காது
தலைவன் இன்றி தாளாது
தனிமையிலும் தூங்காது

பெண் : கனவுகளும் நாளும் தீராது
கவலை வரக்கூடாது
கலந்த வரை காதல் மாறாது
கடைசிவரை வாடாது
பூவானதே தேகம் போராடுதே தாகம்
பூவானதே தேகம் போராடுதே தாகம்
ஆனந்த ராகம்……..நீ……..பாடு…….

பெண் : குங்குமத்து மேனி கொள்ளையிட வா நீ
குங்குமத்து மேனி கொள்ளையிட வா நீ
இழுக்குதா அழைக்குதா இருப்பதை கொடுக்குதா
இல்லாததா வா…..நீ…….தா……ஹோய்………

பெண் : குங்குமத்து மேனி கொள்ளையிட வா நீ………
ஹேய் குங்குமத்து மேனி கொள்ளையிட வா நீ………

பெண் மானே சங்கீதம் பாடிவா

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி
பாடலாசிரியர் : Mu. Metha
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆஹா ஆஹா…..ஆஹா ஆஹா…..
ஆஹா அஹா ஆஹாஆஹா ஆஹா ஹா ஆ…..

ஆண் : பெண் மானே சங்கீதம் பாடிவா
அம்மானை பொன் ஊஞ்சல் ஆடி வா
உல்லாசம் ஆயிரம் உன் பார்வை தேன் தரும்
உன் நாணம் செவ்வானம்……….ம்ம்…
பெண் மானே சங்கீதம் பாடிவா
அம்மானை பொன் ஊஞ்சல் ஆடி வா

ஆண் : தேன் மழை நீ ஹோய் மார்பிலே தூவவோ
தேவதை நீ ஹோய் நான் தினம் தேடவோ

பெண் : கை அருகில் பூ மாலை கால்களின் கோபுரம்
மை விழியில் நீ தானே வாழ்கிறாய் ஓர் புரம்

ஆண் : என் காதல் வானிலே பெண் மேக ஊர்வலம்
காணுவேன்……தேவியை கண்களின் விழாவில்

பெண் : உன் மானே சங்கீதம் பாடவா
உல்லாசம் ஆயிரம்
உன் பார்வை தேன் தரும்
உன் தேனே வந்தேனே….ஏ…..
உன் மானே சங்கீதம் பாடவா இருவர் : ………………………….

பெண் : யாத்திரை ஏன் ஹோய் ராத்திரி நேரமே
போர்க்களம்தான் ஹோய் பூக்களின் தேகமே

ஆண் : தேக மழை நான் ஆகும்
தேதியை தேடுவேன்
ஈர வயல் நீ ஆக மேனியை மூடுவேன்

பெண் : கண்ணோரம் காவியம் கை சேரும் போதிலே
வானமும் தேடியே வாசலில் வரதோ

ஆண் : பெண் மானே சங்கீதம் பாடிவா…..

பெண் : அம்மானை பொன் ஊஞ்சல் ஆட வா
உல்லாசம் ஆயிரம்

ஆண் : ம்ம்….உன் பார்வை தேன் தரும்
உன் நாணம் செவ்வானம்……….ம்ம்…

ஆண் : பெண் மானே சங்கீதம் பாடிவா….

பெண் : அம்மானை பொன் ஊஞ்சல் ஆட வா

வெண் மேகம் விண்ணில் நின்று

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம்
பாடலாசிரியர் : புலமைப்பித்தன்
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : வெண் மேகம் விண்ணில் நின்று
கண்ணே இன்று பன்னீர் தூவும்
செவ்வானம் மண்ணில் வந்து
மஞ்சள் நீராட்டும்……….
விடிகாலை வெள்ளி மீனே….
என் வாழ்வே உன்னால் தானே

ஆண் : கண்ணே நான் அண்ணன் அல்ல
உன்னை ஈன்ற அன்னை நானே
கண்ணீரில் முத்து தொங்கல்
கட்டித் தந்தேனே

ஆண் : ஏழேழு ஜென்மம் இந்த
அண்ணன் தங்கை சொந்தம் வேண்டும்
எந்நாளும் எந்தன் பக்கம்
தாயே நீ வேண்டும்

ஆண் : உன் கண்ணில் கண்ணீர் வந்தால்
எந்தன் கண்ணில் ரத்தம் பாயும்
உன் ஆவி எந்தன் ஆவி
ரெண்டும் ஒன்றாகும்

ஆண் : உன் கண்கள் இல்லாமல்
என் கண்கள் பார்க்குமோ
உன் கால்கள் இல்லாமல்
என் கால்கள் போகுமோ
என் வானம் விடிவதும் பகல் முடிவதும்
உந்தன் பார்வையா…..ஆ…..ல்…….

ஆண் : கண்ணே நான் அண்ணன் அல்ல
உன்னை ஈன்ற அன்னை நானே
கண்ணீரில் முத்து தொங்கல்
கட்டித் தந்தேனே

ஆண் : மன்னாதி மன்னன் எல்லாம்
உன்னை வந்து பெண் பார்க்க
மையேந்தும் கண்ணே உந்தன்
கண்ணோ மண் பார்க்க

ஆண் : கண்ணோரம் வெட்கம் வந்து
நெஞ்சம் எங்கும் மின்னல் ஓட
காலாலே வண்ணக்கோலம்
மண்ணில் நீ போட

ஆண் : செந்தூரம் சிந்தாதோ என் தங்கை பாதமே
அந்நேரம் ஆகாயம் பூமாரி தூவுமே
சொன்னாலும் இனிக்குது
நெஞ்சில் ஒலிக்குது இன்ப ராகமே….ஏ….ஏ….

ஆண் : வெண் மேகம் விண்ணில் நின்று
கண்ணே இன்று பன்னீர் தூவும்
செவ்வானம் மண்ணில் வந்து
மஞ்சள் நீராட்டும்……….
விடிகாலை வெள்ளி மீனே….
என் வாழ்வே உன்னால் தானே

ஆண் : கண்ணே நான் அண்ணன் அல்ல
உன்னை ஈன்ற அன்னை நானே
கண்ணீரில் முத்து தொங்கல்
கட்டித் தந்தேனே