16 Vayathinile

Rajinikanth 16 Vayathinile

ஆட்டுக்குட்டி முட்டையிட்டு

பாடகர்கள் : எஸ். ஜானகி, மலேசியா வாசுதேவன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஆஆ ஆ ஆஅ
ஆஅ ஆஅ
ஆ அ ஆ…

ஆண் : ஆட்டுக்குட்டி முட்டையிட்டு
கோழிக்குட்டி வந்ததுன்னு
யானைக்குஞ்சு சொல்லக்கேட்டு
பூனைக்குஞ்சு சொன்னதுண்டு
கதையில்ல சாமி
இப்போ காணுது பூமி
இது மட்டும்தானா
இன்னும் இருக்குது சாமி

ஆண் : கூத்து மேடை
ராஜாவுக்கு ஏ ஏய் ஏ…..
கூத்து மேடை ராஜாவுக்கு
நூற்றிரெண்டு பொண்டாட்டியாம்
நூற்றிரெண்டு பெண்டாட்டியும்
வாத்து முட்டை போட்டதுவாம்
பட்டத்துராணி அதுல பதினெட்டு பேரு
பதினெட்டு பேர்க்கும் வயசு இருபத்து ஆறு
மொத்தம் இருபத்து ஆறு

பெண் : ஹான்

ஆண் : சின்ன குட்டிகளின் மேல் ஆணை
புது சட்டிகளின் மேல் ஆணை
இரு வள்ளுவன் ஏட்டிலுண்டு
பரம்பரை பாட்டிலுண்டு
கதையில்ல மகராசி

ஆண் : ஆட்டுக்குட்டி முட்டையிட்டு
கோழிக்குட்டி வந்ததுன்னு
யானைக்குஞ்சு சொல்லக்கேட்டு
பூனைக்குஞ்சு சொன்னதுண்டு
கதையில்ல சாமி
இப்போ காணுது பூமி
இது மட்டும்தானா
இன்னும் இருக்குது சாமி

ஆண் : காக்கையில்லா சீமையிலே
காட்டெருமை மேய்க்கையிலே
பாட்டெடுத்து பாடிப்புட்டு
நோட்டமிட்ட சின்னப் பொண்ணு
சந்தைக்கு போனா நானும்
சாட்சிக்கு வர வா
சம்பந்தம் பண்ண
உனக்கு சம்மதம்தானா
காக்கையில்லா சீமையிலே

பெண் : ஏ ஏ ஏ ஏஹெய்………
காக்கையில்லா சீமையிலே
காட்டெருமை மேய்க்கையிலே
காக்க வச்சி நேரம் பாத்து
பாக்கு வச்ச ஆசை மச்சான்
சந்தைக்கு போறேன்
நீங்க சாட்சிக்கு வாங்க க க
சம்பந்தம் பண்ண எனக்கு சம்மதம் தாங்க

பெண் : அட இந்த பக்கம் பாருங்களே
என் கன்னி மொழி கேளுங்களே
அட ஏண்டி என்ன வஞ்சனைனு
கேக்குறீயே கேக்குறீயே
{பழைய நெனப்புடா
பேராண்டி பழைய நெனப்புடா} (2)

ஆண் : கிட்டப்பாவின் பாட்டை கேட்டேன்
சின்னப்பாவை நேரில் பார்த்தேன்
கொட்ட கொட்ட வருகுதம்மா
சங்கீதமா பெருகுதம்மா

ஆண் : வேலைக்கு போனா
எனக்கு ஈடுயில்ல பொண்ணு
பாட்டுல நின்னா நானும் நூத்துல ஒன்னு
என் திறமையை காட்டட்டுமா
இரண்டு சங்கதியை போடட்டுமா

ஆண் : {ததரின ததரின
ததரின ததரின} (2)

மஞ்சக் குளிச்சு அள்ளி முடிச்சு

பாடகர்கள் : எஸ். ஜானகி
பாடலாசிரியர் : Alangudi Somu
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ஓ ஓ ஓஒ

பெண் : மஞ்சக் குளிச்சு அள்ளி முடிச்சு
மெட்டி ஒலிக்க மெல்ல சிரிச்சு
என் சோட்டு செண்டுகளே
இளவாழத் தண்டுகளே
வாழை குருத்துகளே
மாமன் மச்சான் தேடி புடிங்க

பெண் : மஞ்சக் குளிச்சு அள்ளி முடிச்சு
மெட்டி ஒலிக்க மெல்ல சிரிச்சு
என் சோட்டு செண்டுகளே
இளவாழத் தண்டுகளே
வாழை குருத்துகளே
மாமன் மச்சான் தேடி புடிங்க

பெண் : வாரார் அய்யா மன்னாரு
வருஷம் பொறந்தா குளிப்பாரு
வயசு பெண்ண கண்டாத்தான்
வளைஞ்சு குழைஞ்சி சிரிப்பாரு

பெண் : பொன்னையா மாசம் எண்ணெய்ய
பொன்னையா மாசம் எண்ணெய்ய
கொஞ்சம் மஞ்சள்
தேய்ச்சு வழிக்கி பாரய்யா
நில்லய்யா நில்லய்யா
சேலை கட்டிக் கொள்ளய்யா

பெண் : மஞ்சக் குளிச்சு அள்ளி முடிச்சு
மெட்டி ஒலிக்க மெல்ல சிரிச்சு
என் சோட்டு செண்டுகளே
இளவாழத் தண்டுகளே
வாழை குருத்துகளே
மாமன் மச்சான் தேடி புடிங்க

பெண் : ஆளப்பாரு கரியாட்டம்
ஆசையிலே இது நரியாட்டம்
வாழை ஓட்ட நறுக்குங்கடி
வாலிப முறுக்கை ஒடுக்குங்கடி
சந்திரன அழகு இந்திரன
இந்த சப்பாணிக்கு சபலம் பாருங்க

பெண் : அழகப்பா அழகப்பா
ஆணழகன் நீயப்பா

பெண் : மஞ்சக் குளிச்சு அள்ளி முடிச்சு
மெட்டி ஒலிக்க மெல்ல சிரிச்சு
பொன்னில் குட மெடுத்து
வண்ண நீரெடுத்து
என்னாசை கண்ணனுக்கு
எண்ணம்போல நீராட்டுவேன்

பெண் : மஞ்சக் குளிச்சு அள்ளி முடிச்சு
மெட்டி ஒலிக்க மெல்ல சிரிச்சு
என் சோட்டு செண்டுகளே
இளவாழத் தண்டுகளே
வாழை குருத்துகளே
மாமன் மச்சான் தேடி புடிங்க
மாமன் மச்சான் தேடி புடிங்க

செந்தூர பூவே பெண்

பாடகர்கள் : எஸ். ஜானகி
பாடலாசிரியர் : கங்கை அமரன்
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : செந்தூர பூவே

பெண் : { செந்தூர பூவே
செந்தூர பூவே ஜில்லென்ற
காற்றே என் மன்னன் எங்கே
என் மன்னன் எங்கே நீ
கொஞ்சம் சொல்லாயோ } (2)

பெண் : செந்தூர பூவே

பெண் : தென்றலை
தூது விட்டு ஒரு
சேதிக்கு காத்திருப்பேன்
கண்களை மூட விட்டு
இந்த கனவினில் நான்
மிதப்பேன்

பெண் : கன்னி பருவத்தின்
வண்ண கனவிதுவே என்னை
இழுக்குது அந்த நினைவதுவே

பெண் : வண்ண பூவே
தென்றல் காற்றே
என்னை தேடி
சுகம் வருமோ

பெண் : செந்தூர பூவே

பெண் : செந்தூர பூவே
செந்தூர பூவே ஜில்லென்ற
காற்றே என் மன்னன் எங்கே
என் மன்னன் எங்கே நீ
கொஞ்சம் சொல்லாயோ

பெண் : செந்தூர பூவே

பெண் : நீல கருங்குயிலே
தென்னஞ்சோலை
குருவிகளே கோலமிடும்
மயிலே நல்ல கான
பறவைகளே

பெண் : மாலை வரும்
அந்த நாளை உரைத்திடுங்கள்
சாலை வழியெங்கும்
பூவை இறைத்திடுங்கள்

பெண் : வண்ண பூவே
தென்றல் காற்றே
என்னை தேடி
சுகம் வருமோ

பெண் : செந்தூர பூவே

பெண் : செந்தூர பூவே
செந்தூர பூவே ஜில்லென்ற
காற்றே என் மன்னன் எங்கே
என் மன்னன் எங்கே நீ
கொஞ்சம் சொல்லாயோ

பெண் : செந்தூர பூவே
செந்தூர பூவே

செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா

பாடகர்கள் : பி. சுசீலா, மலேசியா வாசுதேவன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் பி. சுசீலா, குழு இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ஹேய்ய்ய்ய்…
தன்னான தான தன்னே தன்னென
ஹோய்
தன்னே தன்னென
ஹோய்
தன தன்னானே தான
தன்னே தான்னான
ஹோய்
தனே தன்னானே
ஹோய்
தனே தன்னானே தன்னானே

குழு : ஹோய்ய்ய்ய்……………..

குழு : செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா
ஹோய்
சேதி என்னக்கா
ஹோய்
நீ சிட்டாட்டம் ஏன் சிரிச்ச சொல்லக்கா
ஹோய்
முத்து பல்லக்கா
ஹோய்
அது என்னமோ என்னமோ

குழு : ஹோய்ய்ய்ய்….

ஆண் : செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா

குழு : ஹோய்

ஆண் : சேதி என்னக்கா

குழு : ஹோய்

ஆண் : நீ சிட்டாட்டம் ஏன் சிரிச்ச சொல்லக்கா

குழு : ஹோய்

ஆண் : முத்து பல்லக்கா

குழு : ஹோய்

ஆண் : அது என்னமோ என்னமோ

குழு : ஹோய்ய்ய்ய்….

குழு : ஹேய்ய்

பெண் : கோயில் அம்மனுக்கு
சூடம் காட்டு
அத நேரில் காட்டு
அது சிரிப்பது தெரியாதோ

பெண் : பூசை உன்
கையால் போட்டாச்சு
நானும் பார்த்தாச்சு
இனி எனக் அது புரியாதோ

ஆண் : {கண்ணால் சொல்லு
மலை எடுப்பேன்
ரெண்டு கையாலே
அத வளைப்பேன்} (2)

ஆண் : சிரிக்காதே நாடு
பொறுக்காதே
என் மனசே கெடுதே
குயிலே மயிலே ஹோய்ய்ய்…

பெண் : செவ்வந்தி பூ குடுத்த சின்னய்யா

குழு : ஹோய்

பெண் : சேதி என்னய்யா

குழு : ஹோய்

பெண் : நான் சிட்டாட்டம் ஏன் சிரிச்சேன் சொல்லய்யா

குழு : ஹோய்

பெண் : முத்து பல்லய்யா

குழு : ஹோய்

பெண் : அது என்னமோ என்னமோ

குழு : ஹோய்ய்ய்ய்….

குழு : தந்தன தான தந்தன தானா
தந்தன தந்தன தந்தன தான
தானா தானா

ஆண் : ஆத்துல காத்தடிச்சா
அலை ஓடும் அலை ஓடும்
அலை ஓடும்
கெண்டை விளையாடும்
ஆத்துல காத்தடிச்சா அலை ஓடும்
கெண்டை விளையாடும்
இப்போ மனசுல துடிக்குதம்மா…

பெண் : ஆயிரம் நெனப்புக்கு வயசிருக்கு
சின்ன மனசிருக்கு
அது துணிஞ்சது எதுக்காக

ஆண் : உடம்பு இப்போ
நடுங்குதம்மா
சலங்கையைப்போல்
குலுங்குதம்மா

பெண் : நீ பலசாலி
நல்ல அறிவாளி

ஆண் : எனக்கு இதுவே போதும்
குயிலே மயிலே ஹோய்….

குழு : செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா
ஹோய்
சேதி என்னக்கா
ஹோய்
நீ சிட்டாட்டம் ஏன் சிரிச்ச சொல்லக்கா
ஹோய்
முத்து பல்லக்கா
ஹோய்
அது என்னமோ என்னமோ

குழு : ஹோய்ய்ய்ய்…..

குழு : செவ்வந்தி பூ குடுத்த சின்னய்யா
ஹோய்
சேதி என்னய்யா
ஹோய்
நான் சிட்டாட்டம் ஏன் சிரிச்சேன் சொல்லய்யா
ஹோய்
முத்து பல்லய்யா
ஹோய்
அது என்னமோ என்னமோ

குழு : ஹோய்ய்ய்ய்….

குழு : அது என்னமோ என்னமோ
ஹோய்ய்ய்ய்……
அது என்னமோ என்னமோ
ஹோய்ய்ய்ய்…..

சோளம் வெதைக்கையிலே

பாடகர்கள் : இளையராஜா
பாடலாசிரியர் : வைரமுத்து
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : சோளம் வெதைக்கையிலே
சொல்லி புட்டு போன புள்ளே
சோளம் வெதைக்கையிலே
சொல்லி புட்டு போன புள்ளே

ஆண் : சோளம் வெளஞ்சு
காத்துகிடக்கு
சோடிக்கிளி இங்கே இருக்கு

ஆண் : {சொன்ன சொல்லு என்ன
ஆச்சு தங்கமே கட்டழகி
எனக்கு நல்லதொரு பதில
சொல்லு குங்கும பொட்டழகி} (2)
ஹே

குழு : ஏஹே ஏஹே
தந்தன தானா தானே தந்த
தந்தன தானா தானே தந்த
தந்தன தானா தானே தந்த

ஆண் : மானே என் மல்லிகையே
மருதை மரிக்கொழுந்தே
தேனே தினைக்கருதே
திருநாளு தேரழகே
உன்ன நினைக்கையிலே
என்ன மறந்தேனடி
பொன்னே பொன்மயிலே
எண்ணம் தவிக்குதடி

ஆண் : சோளம் வெதைக்கையிலே…ஏ…
சொல்லி புட்டு போன புள்ளே…ஏ…
சோளம் வெளஞ்சு காத்துகிடக்கு
சோடிக்கிளி இங்கே இருக்கு

ஆண் : சொன்ன சொல்லு என்ன
ஆச்சு தங்கமே கட்டழகி
எனக்கு நல்லதொரு பதில
சொல்லு குங்கும பொட்டழகி

ஆண் : மாரியம்மன் கோயிலிலே
மாறாம கைபிடிக்க
நாளும் ஒன்னு பாத்து வந்தேன்
நல்ல நேரம் கேட்டு வந்தேன்
அம்மன் மனசிருந்தா
அருள் வந்து சேரும்மடி
கன்னி கருங்குயிலே
நல்ல காலம் பொறந்ததடி

குழு : ஹே ஏ யே ஹே ஏ யே…….