Un Kannil Neer Vazhindal

Rajinikanth Un Kannil Neer Vazhindal

என்ன தேசமோ

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ்
பாடலாசிரியர் : வைரமுத்து
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகர் : கே. ஜே, யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : என்ன தேசமோ
இது என்ன தேசமோ
இங்கு பொய்கள் கூடியே
ஒரு நியாயம் பேசுமோ
தர்மம் தூங்கிப் போகுமோ
நீதி வெல்லுமோ இங்கு நேரமாகுமோ

ஆண் : என்ன தேசமோ
இது என்ன தேசமோ

ஆண் : இன்ப துன்பம் என்பது
இரவு பகலைப் போன்றது
காலம் நாளை மாறலாம்
காயம் எல்லாம் ஆறலாம்
காலம் நாளை மாறலாம்
காயம் எல்லாம் ஆறலாம்

ஆண் : சோகம் என்ன தோழனே
சூழ்ச்சி வெல்வாய் வீரனே
எதிர்த்து நின்று போரிடு
இன்று ஓய்வெடு நீ இன்று ஓய்வெடு

ஆண் : என்ன தேசமோ
இது என்ன தேசமோ

ஆண் : பிறக்கும் போதும் பேரில்லை
இறக்கும் போதும் பேரில்லை
இடையில் தானே குழப்பங்கள்
வாழ்க்கையோடு வழக்குகள்
இடையில் தானே குழப்பங்கள்
வாழ்க்கையோடு வழக்குகள்

ஆண் : ஜெயிக்கப் போகும் மானிடா
மயக்கம் இங்கே ஏனடா
உறுதியோடு கேளடா
உண்மை நீயடா ஓ உண்மை நீயடா

ஆண் : என்ன தேசமோ
இது என்ன தேசமோ
இங்கு பொய்கள் கூடியே
ஒரு நியாயம் பேசுமோ
தர்மம் தூங்கிப் போகுமோ
நீதி வெல்லுமோ இங்கு நேரமாகுமோ

ஆண் : என்ன தேசமோ
இது என்ன தேசமோ

இளமை இதோ இதோ

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன்
பாடலாசிரியர் : கங்கை அமரன்
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : இளமை இதோ இதோ
இனிமை இதோ இதோ
என் இளமை இதோ இதோ
நல்ல இனிமை இதோ இதோ

பெண் : உன்னைப் போல் மன்மதன்
ஊருக்குள்ளே இல்ல

ஆண் : இளமை இதோ இதோ….

பெண் : பொன்னைப் போல் அள்ளுங்க
இன்னுமென்ன சொல்ல

ஆண் : இனிமை இதோ இதோ..

பெண் : உன்னைப் போல் மன்மதன்
ஊருக்குள்ளே இல்ல
பொன்னைப் போல் அள்ளுங்க
இன்னுமென்ன சொல்ல

பெண் : பொன்மேனி

ஆண் : ஆ….

பெண் : உருகுதே

ஆண் : அய்யோ…

பெண் : என்னாசை

ஆண் : அம்மா….

பெண் : பெருகுதே

ஆண் : ஆன்

பெண் : ஏதேதோ நினைவு தோணுதே

ஆண் : ஹா….

பெண் : எங்கேயோ இதயம் போகுதே

ஆண் : யம்மா

பெண் : பனிக்காத்திலே….

ஆண் : எல்லோரும் செய்தாப்பல
நானும் செய்யப் போவதில்ல
சராசரி மனுஷன் கேளடி நானுமில்ல
சராசரி மனுஷன் கேளடி நானுமில்ல
சராசரி மனுஷன் கேளடி நானுமில்ல

ஆண் : சகலமும் தெரிஞ்சவன் தெரிஞ்சுக்க
சகலமும் தெரிஞ்சவன் தெரிஞ்சுக்க
பழந்துணி புதுத்துணி கிழிஞ்சது பார்

ஆண் : நான் போறேன் முன்னால
நீ வாடி பின்னால நாய்க்கரு தோட்டத்துக்கு
பேசாத கண்ணால என்னாடி அம்மாளு
வாடுற வாட்டத்துக்கு

ஆண் : சிரிச்ச சிரிப்புல சில்லரையும் செதறுது
செவந்த முகம் கண்டு எம் மனசும் பதறுது
பவள வாயில தெரியுற அழக
பார்த்ததுமே மனசும் பட்டுத் துடிக்குது…

ஆண் : ஹே ஆத்தா ஆத்தோரமா வாறியா
நான் பாத்தா பாக்காமலே போறியா
அடி அக்கம்பக்கம் யாருமில்ல
வெக்கம் கொள்ள தேவையில்ல
அடி அக்கம்பக்கம் யாருமில்ல
வெக்கம் கொள்ள தேவையில்ல
அடி அக்கம்பக்கம் யாருமில்ல
வெக்கம் கொள்ள தேவையில்ல

ஆண் : செக்கச் செவந்தவன் புள்ள
உன் அத்தப் பெத்த சிங்கம்டி இந்த ஆம்பிள…..

ஆண் : அன்பே…….

பெண் : இன்பம்……

ஆண் : எங்கே……

பெண் : இங்கே……

ஆண் : மாறாத பேரின்ப நீராடலாம்

பெண் : நீரோட நீர் போல நாம் கூடலாம்

ஆண் : அன்பே…….

பெண் : இன்பம்……

ஆண் : எங்கே……

பெண் : இங்கே……
இருவர் : மாறாத பேரின்ப நீராடலாம்

கண்ணில் என்ன கார்காலம்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி
பாடலாசிரியர் : வைரமுத்து
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : கண்ணில் என்ன கார்காலம்
கன்னங்களில் நீர்க்கோலம்
மனமே நினைவே மறந்து விடு
துணை நான் அழகே துயரம் விடு

ஆண் : விழியில் விழும் துளி
என் மார்பில் வீழ்ந்ததே கண்ணே
அமுதம் சிந்தும் கண்ணில் கண்ணீரா
நியாயமா பெண்ணே ஓ…….

ஆண் : கண்ணில் என்ன கார்காலம்
கன்னங்களில் நீர்க்கோலம்

பெண் : நானே உன் சுமையாக ஏன் வந்தேன்
சிறகெல்லாம் சிதையாக வாழ்கின்றேன்
நான் உறங்கும் நாள் வேண்டும்
சாய்ந்து கொள்ளத் தோள் வேண்டும்
நான் உறங்கும் நாள் வேண்டும்
சாய்ந்து கொள்ளத் தோள் வேண்டும்
என் கண்ணில் நீர் வேண்டும்
சுகமாக அழ வேண்டும்

ஆண் : கண்ணில் என்ன கார்காலம்
கன்னங்களில் நீர்க்கோலம்

பெண் : இருள் மூடும் கடலோடு நானிங்கே
என் தோணி கரை சேரும் நாளெங்கே
பூவுக்குள் பூகம்பம்
எங்கு வரும் ஆனந்தம்
பூவுக்குள் பூகம்பம்
எங்கு வரும் ஆனந்தம்
நிழலாக நீ வந்தால்
இது போதும் பேரின்பம்

ஆண் : கண்ணில் என்ன கார்காலம்
கன்னங்களில் நீர்க்கோலம்
மனமே நினைவே மறந்து விடு
துணை நான் அழகே துயரம் விடு

ஆண் : விழியில் விழும் துளி
என் மார்பில் வீழ்ந்ததே கண்ணே
அமுதம் சிந்தும் கண்ணில் கண்ணீரா
நியாயமா பெண்ணே ஓ…….

ஆண் : கண்ணில் என்ன கார்காலம்
கன்னங்களில் நீர்க்கோலம்

மலரே மலரே உல்லாசம்

பாடகர்கள் : எஸ். ஜானகி
பாடலாசிரியர் : Mu. Metha
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : மலரே மலரே உல்லாசம்
உந்தன் நினைவே நினைவே சங்கீதம்
உன்னைத்தான் சந்தித்தாள்
உள்ளம் ஓர் வெள்ளைத்தாள்
இதயம் எழுதும் கவிதை நீ…….

பெண் : மலரே மலரே உல்லாசம்
உந்தன் நினைவே நினைவே சங்கீதம்

பெண் : தாவணி கோவிலில் காவடி சிந்துகள்
யாரிசை சேர்த்ததோ யார் மனம் வேர்த்ததோ
ஈடில்லா காதலன் வாசனை வீசுதோ
தூங்கினால் காதிலே ஞாபகம் பேசுதோ
நீ பாடும் ராகம் உன் வாழ்வின் யோகம்
தகுதுனு தகுதுனு தகுதுனு தகுதுனு…..தா…..

பெண் : மலரே மலரே உல்லாசம்
உந்தன் நினைவே நினைவே சங்கீதம்
உன்னைத்தான் சந்தித்தாள்
உள்ளம் ஓர் வெள்ளைத்தாள்
இதயம் எழுதும் கவிதை நீ…….

பெண் : மலரே மலரே உல்லாசம்
உந்தன் நினைவே நினைவே சங்கீதம்

பெண் : வானிலே வெண்ணிலா
யாரைத்தான் தேடுதோ
மோக நோய் தீரவே நீரில்தான் மூழ்குதோ
வாசலில் வாலிபம் வாழ்விலே யௌவனம்
கண்களோ சம்மதம் கால்களே தாமதம்
ஆடைகள் ஏது நீராடும் போது
தகுதுனு தகுதுனு தகுதுனு தகுதுனு..தா…..

பெண் : மலரே மலரே உல்லாசம்
உந்தன் நினைவே நினைவே சங்கீதம்
உன்னைத்தான் சந்தித்தாள்
உள்ளம் ஓர் வெள்ளைத்தாள்
இதயம் எழுதும் கவிதை நீ…….

பெண் : மலரே மலரே உல்லாசம்
உந்தன் நினைவே நினைவே சங்கீதம்

பெண் : ………………….

மூணு வேலை சோறு

பாடகர்கள் : எஸ். ஜானகி
பாடலாசிரியர் : Mu. Metha
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : மூணு வேலை சோறு போடலாம்
ராணியாக என்னை ஆக்கலாம்

பெண் : மூணு வேலை சோறு போடலாம்
ராணியாக என்னை ஆக்கலாம்
நெஞ்சத்தில நிம்மதிய மாமா
நெஞ்சத்தில நிம்மதிய மாமா
அள்ளி தர உன்னாலதான் ஆகுமா

பெண் : மூணு வேலை சோறு போடலாம்
ராணியாக என்னை ஆக்கலாம்

பெண் : வேலியில சிக்கிக்கிட்டு
வேதனைய பட்டுக்கிட்டேன்
தாலி இல்ல பொட்டும் இல்ல
புள்ள கூட பெத்துகிட்டேன்

பெண் : வேலியில சிக்கிக்கிட்டு
வேதனைய பட்டுக்கிட்டேன்
தாலி இல்ல பொட்டும் இல்ல
புள்ள கூட பெத்துகிட்டேன்

பெண் : ஊரு சனம் காலடியில்
என் பொழப்பதான் மிதிக்கும்
ஊருக்குள்ள காத்தடிச்சா
எங்க கதைதான் பறக்கும்

பெண் : இங்கிலாந்து ராணி என்ன
அம்மன் ஆன சாமி என்ன
ஆம்பளையின் கையில் அவளும்
அடங்கித்தான போக வேணும்
ஏழை பொண்ணு என்னைகூட
ராணியாக பார்க்கும் மாமா
நெஞ்சத்தில நிம்மதிய மாமா
அள்ளி தர உன்னாலதான் ஆகுமா

பெண் : மூணு வேலை சோறு போடலாம்
ராணியாக என்னை ஆக்கலாம்

பெண் : ஊர சுத்தும் கன்னுக்குட்டி
சேர்ந்துகிட்ட ஆட்டுக்குட்டி
உன்ன இப்ப விட்டுபுட்டு
ஊரு மேய போவதென்ன

பெண் : ஊர சுத்தும் கன்னுக்குட்டி
சேர்ந்துகிட்ட ஆட்டுக்குட்டி
உன்ன இப்ப விட்டுபுட்டு
ஊரு மேய போவதென்ன

பெண் : நான் புடிச்ச கன்னுக்குட்டி
அது புடிச்ச ஆட்டுக்குட்டி
வட்டம் போட்டு வந்ததென்ன
கைய விட்டு போனதென்ன

பெண் : கைத்துணையா யாரும் இல்ல
தாயும் ஒன்னு பிள்ளையும் ஒன்னு
ஆத்துக்குள்ள போகுதம்மா
காது கெட்ட பரிசல் மேல
யாரு கதை எனக்கெதுக்கு
என் கதைய கேட்டுப்பாரு
நெஞ்சத்தில நிம்மதிய மாமா
அள்ளி தர உன்னாலதான் ஆகுமா

பெண் : மூணு வேலை சோறு போடலாம்
ராணியாக என்னை ஆக்கலாம்
மூணு வேலை சோறு போடலாம்
ராணியாக என்னை ஆக்கலாம்
நெஞ்சத்தில நிம்மதிய மாமா
நெஞ்சத்தில நிம்மதிய மாமா
அள்ளி தர உன்னாலதான் ஆகுமா

நேத்து வரை யாரோட

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி
பாடலாசிரியர் : கங்கை அமரன்
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ……………………….

ஆண் : நேத்து வரை யாரோட
நீ இருந்தாலும்
கண்டு கொள்ள மாட்டேனே
கன்னி பொம்பளை

ஆண் : ஆ….நேத்து வரை யாரோட
நீ இருந்தாலும்
கண்டு கொள்ள மாட்டேனே
கன்னி பொம்பளை

ஆண் : இப்ப நீ என் கூட இருக்குறதுதானே
செப்பு குடம் போல சிரிக்குறதுதானே

ஆண் : அட உண்மையடி உண்மையடி
கன்னி பொம்பளை
அது ஒத்து கொள்ளு ஒத்து கொள்ளு
சின்ன பொம்பளை

ஆண் : அட உண்மையடி உண்மையடி
கன்னி பொம்பளை
அது ஒத்து கொள்ளு ஒத்து கொள்ளு
சின்ன பொம்பளை

ஆண் : ஆ….நேத்து வரை யாரோட
நீ இருந்தாலும்
கண்டு கொள்ள மாட்டேனே
கன்னி பொம்பளை

ஆண் : பூவா என் மேல நீ சாஞ்சா
பூமி தன்னால சாஞ்சாடும்

பெண் : பூமி இங்கே அது நீதானே
பூவா பூத்தேன் நான் உன்மேல

ஆண் : வாடி தெம்மாங்கு நீ பாடு
வாடை காத்துக்கு நீ ஜோடி

பெண் : வண்ணமயில் கும்குமத்தில் நீராடி
உன் வாசலுக்கு வந்திருக்கு என் சாமி
என் மன்னனுக்கு சங்கதிய சொல்லாட்டி
அட யாருகிட்ட போவா உன் சீமாட்டி

ஆண் : அந்தியில வைக்கும் பந்தி இது இல்ல
முந்தி அத தந்தா சந்தனமும் இல்ல
சங்கு சக்கர சாமி சக்கர
பங்கு வைக்குற ரொம்ப அக்கறை

பெண் : நேத்து வரை யாரோட
நான் இருந்தாலும்
அதை மறந்து போனேன்
என் மச்சான் முன்னால

பெண் : இப்ப நீ என் கூட இருக்குறதுதானே
செப்பு குடம் போல சிரிக்குறதுதானே
உண்மை இது உண்மை இது
சின்ன மச்சானே
ஒத்துக்கொண்டேன் ஒத்துக்கொண்டேன்
கருத்த மச்சானே

பெண் : நேத்து வரை யாரோட
நான் இருந்தாலும்
அதை மறந்து போனேன்
என் மச்சான் முன்னால இருவர் : ……………………..

பெண் : கேணி தண்ணீரும் ஆத்தோட
தானா போகாது என் மாமா

ஆண் : ஓடை தண்ணீரும் ஒரு நாளும்
ஒருத்தன் நிலத்தில பாயாது

பெண் : பாத்தா என் தாகம் தீராது
கை சேர்த்தா உன் ஆசை மாறாது

ஆண் : பாட்டுக்கு பக்க மேளம் நீதான்டி
என் கூட்டுக்கு பெண் ஜோடி நீதான்டி
காட்டுக்கு கட்டில கொண்டாடி
அட வீட்டுக்கு தொட்டிலே வேண்டாம்டி

பெண் : சந்தையில பார்த்த சந்தனத்து தேரே
என் சிங்கத்துக்கு நானே சீரு ஒன்னு தாரேன்
சங்கு சக்கர சாமி சக்கர
பங்கு வைக்குற ரொம்ப அக்கறை

ஆண் : நேத்து வரை யாரோட
நீ இருந்தாலும்
ஆஹ் கண்டு கொள்ள மாட்டேனே
கன்னி பொம்பளை

ஆண் : நேத்து வரை யாரோட
நீ இருந்தாலும்
கண்டு கொள்ள மாட்டேனே
கன்னி பொம்பளை

ஆண் : இப்ப நீ என் கூட இருக்குறதுதானே
செப்பு குடம் போல சிரிக்குறதுதானே

ஆண் : அட உண்மையடி உண்மையடி
கன்னி பொம்பளை
அது ஒத்து கொள்ளு ஒத்து கொள்ளு
சின்ன பொம்பளை ஆ…..

ஆண் : அட உண்மையடி உண்மையடி
கன்னி பொம்பளை
அது ஒத்து கொள்ளு ஒத்து கொள்ளு
சின்ன பொம்பளை ஆஹ்…

பெண் : நேத்து வரை யாரோட
நான் இருந்தாலும்

ஆண் : ஹே ஹே

பெண் : அதை மறந்து போனேன்
என் மச்சான் முன்னால

ஆண் : தினக்தக்கட

பெண் : நேத்து வரை யாரோட
நான் இருந்தாலும்

ஆண் : ஹே ஹே

பெண் : அதை மறந்து போனேன்
என் மச்சான் முன்னால