Anbulla Rajinikanth

Rajinikanth Anbulla Rajinikanth

இளங்குயிலே சின்னஞ்சிறு மயிலே

பாடகர்கள் : வாணி ஜெயராம்
பாடலாசிரியர் : வாலி
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகி : வாணிஜெயராம் இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : இளங்குயிலே சின்னஞ்சிறு மயிலே
அடி உனக்கெதுக்கு வீணா மன கவலை
இங்கே வழிதுணையா நான் தான் இருக்கையிலே
கோவிக்கிற பாப்பா கோயம்பத்தூர் போனா
கலகலன்னு சிரித்திடுவா வள வலன்னு பேசிடுவா

குழு : கலகலன்னு சிரித்திடுவா வள வலன்னு பேசிடுவா

பெண் : இளங்குயிலே சின்னஞ்சிறு மயிலே
அடி உனக்கெதுக்கு வீணா மன கவலை
இங்கே வழிதுணையா நான் தான் இருக்கையிலே
கோவிக்கிற பாப்பா கோயம்பத்தூர் போனா
கலகலன்னு சிரித்திடுவா வள வலன்னு பேசிடுவா

குழு : கலகலன்னு சிரித்திடுவா வள வலன்னு பேசிடுவா

பெண் : காட்டு புறத்திலே கொட மழை பேஞ்சுதாம்

குழு : ஹை….

பெண் : கொட மழையிலே காட்டு யானை நனஞ்சுதாம்
யான நனன்சதும் ஹசுக்குனு தான் தும்பிசாம்
தும்மி முடிச்சதும் தும்பிக்கையும் பிஞ்சிதாம்

பெண் : கத கதையா நானும் சொல்லட்டுமா

குழு : ஹோய் ஹோய்

பெண் : கடு கடுத்த நெஞ்ச கிள்ளட்டுமா

குழு : ஹோய் ஹோய்

பெண் : கண்ணாக நீ இருந்தா கண் இமையா நான் இருப்பேன்
கடலாக நீ இருந்தா கரை இரண்டா நான் இருப்பேன்
உன் முகத்தில் துயரம் என்ன கண்மணியே கொஞ்சம் சிரி

பெண் : இளங்குயிலே சின்னஞ்சிறு மயிலே
அடி உனக்கெதுக்கு வீணா மன கவலை
இங்கே வழிதுணையா நான் தான் இருக்கையிலே
கோவிக்கிற பாப்பா கோயம்பத்தூர் போனா
கலகலன்னு சிரித்திடுவா வள வலன்னு பேசிடுவா

குழு : கலகலன்னு சிரித்திடுவா வள வலன்னு பேசிடுவா

குழு : ………………………………….

பெண் : ஏரி கரையிலே நார ஒன்னு நின்னுச்சாம்
எம்பி குதிக்கிற மீனா புடிச்சு தின்னுச்சாம்
தின்னு முடிச்சதும் கொறட்ட விட்டு தூங்கிச்சாம்
விட்ட கொறட்டையிலே மீனு வெளியே வந்துச்சாம்

பெண் : தண்ணியிலே தாவி குதிச்சிடுச்சாம்

குழு : ஹோய் ஹோய்

பெண் : நாரைய பார்த்து சிரிசிடுச்சாம்

குழு : ஹே ஹே

பெண் : அம்மாடி நீ நெனச்சா எப்போதுமே சிரிச்சிடலாம்
பொல்லாத துன்பத்திலும் மீனாட்டம் குதிச்சிடலாம்
சித்திரமே ரத்தினமே முத்தினமே கொஞ்சம் சிரி

பெண் : இளங்குயிலே சின்னஞ்சிறு மயிலே
அடி உனக்கெதுக்கு வீணா மன கவலை
இங்கே வழிதுணையா நான் தான் இருக்கையிலே
கோவிக்கிற பாப்பா கோயம்பத்தூர் போனா
கலகலன்னு சிரித்திடுவா வள வலன்னு பேசிடுவா

குழு : கலகலன்னு சிரித்திடுவா வள வலன்னு பேசிடுவா
கலகலன்னு சிரித்திடுவா வள வலன்னு பேசிடுவா
லலலா லலலா லலலா லலலா……………….

கடவுள் உள்ளமே

பாடகர்கள் : Latha Rajinikanth
பாடலாசிரியர் : வாலி
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகி : லதா ரஜினிகாந்த் இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ

பெண் : கடவுள் உள்ளமே
ஓர் கருணை இல்லமே

குழு : கடவுள் உள்ளமே
ஓர் கருணை இல்லமே

பெண் : தந்தை இல்லை
தாயும் இல்லை தெய்வமன்றி
யாரும் இல்லை

குழு : தந்தை இல்லை
தாயும் இல்லை தெய்வமன்றி
யாரும் இல்லை கடவுள் உள்ளமே
ஓர் கருணை இல்லமே

பெண் : சின்ன சின்ன
பூக்கள் சிந்திய வேளை
அன்பு என்னும் நூலில்
ஆக்கிய மாலை பாதம்
செல்லும் பாதை காட்டிடும்
தலைவா என் தலைவா

குழு : ஊனம் உள்ள பேரை
காத்திடும் இறைவா என்
இறைவா

பெண் : ஜீவன் யாவும்
ஒன்று இங்கு யாரும்
சொந்தமே

குழு : ஜீவன் யாவும்
ஒன்று இங்கு யாரும்
சொந்தமே

பெண் : இது தான் இயற்கை
தந்த பாசபந்தமே

குழு : { கடவுள் உள்ளமே
ஓர் கருணை இல்லமே } (2)

பெண் : கண் இழந்த பிள்ளை
காணும் உண்மை கண் இருக்கும்
பேர்கள் கண்டது இல்லை
ஊருக்கொரு வானம் இல்லையே
இறைவா உன் படைப்பில்

குழு : ஆளுக்கொரு ஜாதியில்லையே
அது போல் உயிர் பிறப்பில்

பெண் : உண்ணும் உணவும்
நீரும் தினம் தந்த தெய்வமே

குழு : உண்ணும் உணவும்
நீரும் தினம் தந்த தெய்வமே

பெண் : என்றும் உமக்கே
நாம் நன்றி சொல்லுவோம்

குழு : { கடவுள் உள்ளமே
ஓர் கருணை இல்லமே } (2)
அடைக்கலம் கொடுத்தவன்
அருளை பாடுவோம் தந்தை
இல்லை தாயும் இல்லை
தெய்வம் அன்றி யாரும் இல்லை

குழு : கடவுள் உள்ளமே
ஓர் கருணை இல்லமே

முத்து மணி சுடரே வா……

பாடகர்கள் :  K. J. Yesudas
பாடலாசிரியர் : Na. Kamarasan
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : ரஜினி அங்கிள்………..

ஆண் : முத்து மணி சுடரே வா……
முல்லை மலர் சரமே வா……

ஆண் : முத்து மணி சுடரே வா
முல்லை மலர் சரமே வா
கண்ணுறங்க நேரமானதே
கண்ணே என் பொண்ணே தாலேலோ

ஆண் : முத்து மணி சுடரே வா
முல்லை மலர் சரமே வா
கண்ணுறங்க நேரமானதே
கண்ணே என் பொண்ணே தாலேலோ

பெண் : ம்ஹ்ஹூஊம் நான் தூங்க மாட்டேன்
அங்கிள் நான் ஒளிஞ்சுக்கிறேன்..
என்ன புடிங்க பாக்கலாம்……

குழு : ………………..

ஆண் : ஆயிரம் பூவோடு பாடிடும் வண்டே
ஆசைகள் பூத்தாடும் தேன்மொழி எங்கே
அழகாய் நாள் தோறும் புதுமை கொண்டாடும்
மலரே நீ பேசு…அவளைக் கண்டாயோ

ஆண் : தானாக தள்ளாடும் பூவண்ணமே
தானாக தள்ளாடும் பூவண்ணமே
உடைகள் அணிந்து கனவு சுமந்து
நடந்த நிலவை நீயும் தேடுவாய்

பெண் : ரஜினி அங்கிள்…நான் இங்க இருக்கேன்…
இங்க…இங்க…ஹா…..ஹா…..ஹா….

ஆண் : முத்து மணி சுடரே வா
முல்லை மலர் சரமே வா
கண்ணுறங்க நேரமானதே
கண்ணே என் பொண்ணே தாலேலோ

ஆண் : காற்றினில் தேர் போல ஓடிடும் மானே
தன் வழி போனாளே…கனிமொழி எங்கே
அலை போல் பாய்ந்தோடும் முயலே நீ சொல்லு
தனியே பார்த்தாயோ…அவளும் வந்தாளோ

ஆண் : நான் தேடும் பொன்மாலை கண்டேனடி
நான் தேடும் பொன்மாலை கண்டேனடி
அசைந்து குலுங்கி சிரித்து சிரித்து
ஒளிந்த பதுமை நேரில் வந்தது…

ஆண் : முத்து மணி சுடரே வா
முல்லை மலர் சரமே வா
கண்ணுறங்க நேரமானதே
கண்ணே என் பொண்ணே தாலேலோ

ஆண் : முத்து மணி சுடரே வா
முல்லை மலர் சரமே

தேன் பூவே பூவே வா

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி
பாடலாசிரியர் : வாலி
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : தேன் பூவே பூவே வா
தென்றல் தேட
பூந்தேனே தேனே வா
தாகம் கூட
நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்
நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்
நூறு ராகம் நெஞ்சோடுதான்

பெண் : உனை நினைத்தேன் பூவே பூவே வா
தென்றல் தேட….

ஆண் : பனி விழும் புல்வெளியில்
தினம் தினம் பொன் பொழுதில்

பெண் : கனி விழும் உன் மடியில்
கலந்திடும் உன் உறவில்

ஆண் : நானும் கம்பன் தான் கொஞ்சும் போது

பெண் : ஓ கொஞ்சும் இன்பம் போல் வேறு ஏது

ஆண் : தேவதேவி என்னோடு தான்

பெண் : உனை நினைத்தேன் பூவே பூவே வா
தென்றல் தேட….

ஆண் : பூந்தேனே தேனே வா
தாகம் கூட

பெண் : இடையினில் உன் விரல்கள்
எழுதிடும் என் சுகங்கள்

ஆண் : அணைக்கையில் உன் உடலில்
அழுந்திடும் என் நகங்கள்

பெண் : மீண்டும் மீண்டும் நான் வேண்டும்போது

ஆண் : ஆஹ் ஆ ஆ ஆஹ்
காதல் யோகம்தான் கட்டில் மீது

பெண் : காணவேண்டும் உன்னோடு தான்

பெண் : உனை நினைத்தேன் பூவே பூவே வா
தென்றல் தேட….
பூந்தேனே தேனே வா
தாகம் கூட
நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்
நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்
நூறு ராகம் நெஞ்சோடுதான்

ஆண் : உனை நினைத்தேன் பூவே பூவே வா

பெண் : லால..லாலா இருவர் : லா லல ல ல லா லால..லாலா