Aval Appadithan

Rajinikanth Aval Appadithan

பன்னீர் புஷ்பங்களே

பாடகர்கள் : Kamal Hassan
பாடலாசிரியர் : கங்கை அமரன்
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகர் : கமல் ஹாசன் இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஆஹா
ஆஆ ஆஆ

ஆண் : { பன்னீர் புஷ்பங்களே
ராகம் பாடு உன்னைப்போலே
எந்தன் உள்ளம் ஆடுது
புது தாளம் தொட்டு ஓ
புது ராகமிட்டு } (2)

ஆண் : ஆண் கொண்ட
தாகம் தீர்க்கின்ற தேகம்
பெண்ணென்ற ஓரினமோ
இது யார் பாவம்

ஆண் : ஆண் செய்த
சட்டம் அவர் போட்ட
வட்டம் அதற்கென்று
பெண்ணினமோ இது
யார் சாபம்

ஆண் : நியாயங்களோ
பொதுவானது
புரியாமல் போனது

ஆண் : பன்னீர் புஷ்பங்களே
ராகம் பாடு உன்னைப்போலே
எந்தன் உள்ளம் ஆடுது
புது தாளம் தொட்டு ஓ
புது ராகமிட்டு

ஆண் : பாஞ்சாலி வாழ்ந்த
பரிதாப வாழ்வை
பாராட்ட யாருமில்லை
நிஜ வாழ்க்கையிலே

ஆண் : பலபேரைச் சேரும்
பரந்தாமன் தன்னை
புகழ் பாட கேட்டதுண்டு
இந்த பூமியிலே

ஆண் : நியாயங்களோ
பொதுவானது
புரியாமல் போனது

ஆண் : பன்னீர் புஷ்பங்களே
ராகம் பாடு உன்னைப்போலே
எந்தன் உள்ளம் ஆடுது
புது தாளம் தொட்டு ஓ
புது ராகமிட்டு

உறவுகள் தொடர்கதை

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ்
பாடலாசிரியர் : கங்கை அமரன்
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகர் : கே.ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : உறவுகள் தொடர்கதை
உணர்வுகள் சிறுகதை
ஒரு கதை என்றும்
முடியலாம் முடிவிலும்
ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே

ஆண் : உன் நெஞ்சிலே
பாரம் உனக்காகவே
நானும் சுமைதாங்கியாய்
தாங்குவேன்

ஆண் : உன் கண்களின்
ஓரம் எதற்காகவோ ஈரம்
கண்ணீரை நான்
மாற்றுவேன் வேதனை தீரலாம்
வெறும்பனி விலகலாம்
வெண்மேகமே புது
அழகிலே நானும்
இணையலாம்

ஆண் : உறவுகள் தொடர்கதை
உணர்வுகள் சிறுகதை
ஒரு கதை என்றும்
முடியலாம் முடிவிலும்
ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே

ஆண் : வாழ்வென்பதோ
கீதம் வளர்கின்றதோ நாதம்
நாள் ஒன்றிலும் ஆனந்தம்

ஆண் : நீ கண்டதோ
துன்பம் இனி வாழ்வெல்லாம்
இன்பம் சுக ராகமே
ஆரம்பம்

ஆண் : நதியிலே புது
புனல் கடலிலே கலந்தது
நம் சொந்தமோ இன்று
இணைந்தது இன்பம் பிறந்தது

ஆண் : உறவுகள் தொடர்கதை
உணர்வுகள் சிறுகதை
ஒரு கதை என்றும்
முடியலாம் முடிவிலும்
ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே
இனியெல்லாம் சுகமே

வாழ்க்கை ஓடம் செல்ல ஆற்றில்

பாடகர்கள் : எஸ். ஜானகி
பாடலாசிரியர் : கண்ணதாசன்
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : வாழ்க்கை
ஓடம் செல்ல ஆற்றில்
நீரோட்டம் இல்லை
வாழ்க்கை ஓடம் செல்ல
ஆற்றில் நீரோட்டம் இல்லை

பெண் : யாரும் தேரில்
செல்ல ஊரில் தேறும்
இல்லை எங்கோ ஏதோ
யாரோ

பெண் : வாழ்க்கை
ஓடம் செல்ல ஆற்றில்
நீரோட்டம் இல்லை

பெண் : அழகான மேடை
சுகமான ராகம் இடையினில்
வேலிக உண்டு ஆறாத
புண்ணும் நூறான முள்ளும்
ஆடிடும் கால்களில் உண்டு

பெண் : எதிலேயும்
பெண்மை சுகம்
காணவில்லை ஆ
ஆஆ ஆஆ எதிலேயும்
பெண்மை சுகம்
காணவில்லை
எரியாத தீபங்கள்
பெண்ணா

பெண் : வாழ்க்கை
ஓடம் செல்ல ஆற்றில்
நீரோட்டம் இல்லை

பெண் : ஓரெங்கும்
மேடை ராஜாக்கள்
வேஷம் உண்மையில்
ராஜாக்கள் இல்லை
ஓரெங்கும் சோலை
ரோஜாக்கள் வாசம்
உண்மையில் ரோஜாக்கள்
இல்லை

பெண் : உலகத்தில்
பெண்மை உயர்வாகவில்லை
ஆ ஆஆ ஆஆ உலகத்தில்
பெண்மை உயர்வாகவில்லை
உதவாத புஷ்பங்கள் பெண்கள்

பெண் : வாழ்க்கை
ஓடம் செல்ல ஆற்றில்
நீரோட்டம் இல்லை

பெண் : யாரும் தேரில்
செல்ல ஊரில் தேறும்
இல்லை எங்கோ ஏதோ
யாரோ

பெண் : வாழ்க்கை
ஓடம் செல்ல ஆற்றில்
நீரோட்டம் இல்லை