Lal Salaam

Rajinikanth Lal Salaam

ஏ புள்ள

பாடகர்கள் : சித் ஸ்ரீராம்
பாடலாசிரியர் : கபிலன்
இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
பாடகர் : சித் ஸ்ரீராம் இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான் பாடல் ஆசிரியர் : கபிலன்

ஆண் : அடி பச்சரிசி பல்லுக்காரி
பட்டினிக்குப் பந்தி வைக்க
மச்சமெல்லாம் மின்னுதடி
நட்சத்திரமா

ஆண் : அட தண்ணீர்ல மீனு ஒன்னு
தக திமி தா
நெஞ்சுக்குளி பள்ளத்துல
வந்து குதிச்சா

ஆண் : ஏய் சித்தாட கட்டி வந்த
சிங்காரமே ஹே சிங்காரமே
ஹே சிங்காரமே
மண் பானை உடையாத மந்திரமே
சீம்பாலில் செஞ்சு வச்ச சித்திரமே
அடி எம்மே

ஆண் : ஏ புள்ள கக்களத்தி
நீ என்பகத்தி செம்பகத்தி
மண்மகத்தி
ஏ புள்ள என்ன சுத்தி
மண்ண சுத்தி விண்ண சுத்தி
உன்ன சுத்தி

ஆண் : ஏ புள்ள வெண்ணிலவின் விதையே
வேட்டிச் சேலை விடுகதையே
ஆளான மழையே
பூவா வீசுகின்ற
புயலே வா வா

ஆண் : ஏ புள்ள கக்களத்தி
நீ என்பகத்தி செம்பகத்தி
மண்மகத்தி
ஏ புள்ள என்ன சுத்தி
மண்ண சுத்தி விண்ண சுத்தி
உன்ன சுத்தி

ஆண் : முனகல் …..

ஆண் : மந்திரிச்ச மயிலே
கரும்பில் செய்த குழலே
நெஞ்சில் வாழும் நிழலே

ஆண் : ஆட ஆட பாலாட
ஆட்டம் போடும் நூலாட
உன் வாசல் பூன நானாடி
வாழைமீனு நீயடி

ஆண் : மோன மோன முந்தான
மோகம் கொண்டு வந்தான
மோன மோன முந்தான
மோகம் கொண்டு வந்தான
பூட்டிவை பொத்தான
ஆசை தீர அத்தான

ஆண் : ஏ புள்ள கக்களத்தி
நீ என்பகத்தி செம்பகத்தி
மண்மகத்தி
ஏ புள்ள என்ன சுத்தி
மண்ண சுத்தி விண்ண சுத்தி
உன்ன சுத்தி

ஆண் : ஏ புள்ள வெண்ணிலவின் விதையே
வேட்டிச் சேலை விடுகதையே
ஆளான மழையே
பூவா வீசுகின்ற
புயலே வா வா

ஆண் : பள்ளிக்கூடம் முடிஞ்சா
வீட்டு பாடம் இருக்கு
என்ன வேணும் உனக்கு….

ஆண் : ஆரம் ஆரம் சஞ்சாரம்
அசர வேணும் பஞ்சாரம்
அடி கண்ணே என்ன யோசன
கண்ணில் காதல் வாசன

ஆண் : காட்டு மல்லி கையோடு
கட்டி போட்ட மெய்யோடு
காட்டு மல்லி கையோடு
கட்டி போட்ட மெய்யோடு
ஒன்னுக்குள்ள ஒன்னோடு
வேரும் போகும் மண்ணோடு

ஆண் : ஏ புள்ள கக்களத்தி
நீ என்பகத்தி செம்பகத்தி
மண்மகத்தி
ஏ புள்ள என்ன சுத்தி
மண்ண சுத்தி விண்ண சுத்தி
உன்ன சுத்தி

ஆண் : ஏ புள்ள வெண்ணிலவின் விதையே
வேட்டிச் சேலை விடுகதையே
ஆளான மழையே
பூவா வீசுகின்ற
புயலே வா வா

அன்பாளனே

பாடகர்கள் : Deva, ஏ. ஆர். ரஹ்மான்
பாடலாசிரியர் : Yugabharathi
இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
பாடகர்கள் : தேவா மற்றும் ஏ. ஆர். ரகுமான் இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான் பாடல் ஆசிரியர் : யுகபாரதி

பெண் : ………….

ஆண் : எல்லாமும் இங்கே
அல்லாவும் நானே ஆகும்
பொல்லாத காலம்
கண்ணீரில் கோலம் போடும்

ஆண் : ஓடை இல்லாமல் போகின்ற ஓடத்திலே
ஓய்ந்தேனே ஓயாத சோகத்திலே
தீயில் பஞ்சாகி வேகின்ற நேரத்திலே
ஓஓ… ஓஓ…

ஆண் : வல்லோனே நான் உன்னை காண்பேனோ
துன்பத்திலே சொல் சொல் சொல்

ஆண் : அன்பாளனே சொல் அருளாளனே சொல்
அன்பாளனே சொல் சொல் சொல்
அன்பாளனே சொல் அருளாளனே சொல்
அன்பாளனே சொல் சொல் சொல்

ஆண் : எல்லாமும் இங்கே
அல்லாவும் நானே ஆகும்
பொல்லாத காலம்
கண்ணீரில் கோலம் போடும்

ஆண் : ஓடை இல்லாமல் போகின்ற ஓடத்திலே
ஓய்ந்தேனே ஓயாத சோகத்திலே
தீயில் பஞ்சாகி வேகின்ற நேரத்திலே
ஓஓஓ…. ஓஓஓ…

ஆண் : நல்லோருக்கு ஓர் தீங்கு செய்தேனில்லை
நம்பிக்கை துரோகத்தை சேர்ந்தேனில்லை
ஆனாலும் அல்லா நீ ஏன் என் மேல் கோபம் கொண்டாய்
ஓஓஓ…. ஓஓஓ…

ஆண் : பொய்வேடம் நான்
என்றும் இட்டேன் இல்லை
இல்லாரின் கைக்காசை
தொட்டேன் இல்லை

ஆண் : ஆனாலும் அல்லா நீ ஏன்
என்னை தீயாய் சுட்டாய்
ஓஓஓ…. ஓஓஓ…

ஆண் : சேதாரம் ஆனாலும் அல்லாஹ் உன்
அன்பாலே தீரும் துயர் யாவும்
ஆதாரம் நீ ஆனால் எல்லாமே
கை சேர பாரம் பறந்தோடும்

ஆண் : எல்லாமும் இங்கே
அல்லாஹ் உன்னாலே ஆகும்

ஆண் : ஓடை இல்லாமல் போகின்ற ஓடத்திலே
ஓய்ந்தேனே ஓயாத சோகத்திலே
தீயில் பஞ்சாகி வேகின்ற நேரத்திலே
ஓஓஓ…. ஓஓஓ… முனகல் : …………..

ஆண் : முன்னேறி முன்னாலே வந்தோர் உண்டு
முள் மீதே கால் வைத்து சென்றோர் உண்டு
என்றாலும் அல்லாஹ்
உன் அன்பின்றி வெல்வார் உண்டோ
ஓஓஓ….

ஆண் : தன் போக்கில் எங்கேயும் செல்வர் உண்டு
தள்ளாடி பின்னாலே நின்றார் உண்டு
என்றாலும் அல்லாஹ்
உன் கண் இன்றி காண்பார் உண்டோ
ஓஓஓ….

ஆண் : ஆகாயமானாலும் அல்லாஹ் நீ இல்லாமல்
தூரல் கிடையாதே
பூலோகம் ஆனாலும் அல்லாஹ்
உன் சொல்லின்றி பூவும் மலராதே அனைவரும் : எல்லாமும் இங்கே அல்லாஹ்வும் நானே ஆகும்
ஈடுயில்லா உன்னை சொன்னாலே இன்பம் கூடும்
இதன் உன் பார்வை செய்கின்ற மாயத்திலே
எங்கேயும் தோன்றாதோ தீபங்களே
தாயும் நீயாகி கை தாங்கும் நேரத்திலே
ஓஓஓ… அனைவரும் : நோய் ஏது நொடி ஏது
நீ இன்றி உயிர் ஏது சொல்

ஆண் : சொல் சொல் சொல் சொல் சொல் சொல் சொல் ஆண் மற்றும்

குழு : அன்பாளனே சொல் அருளாளனே சொல்
அன்பாளனே சொல் சொல் சொல்
அன்பாளனே சொல் அருளாளனே சொல்
அன்பாளனே சொல் சொல் சொல்

பெண் : …………………

ஜலாலி

பாடகர்கள் : Sarath Santosh, ஏ. ஆர். ரஹ்மான்
பாடலாசிரியர் : Mashook Rahman
இசையமைப்பாளர் : A. H. Kaashif
பாடகர்கள் : சரத் சந்தோஷ் மற்றும் ஏ. ஆர். ரஹமான் இசை அமைப்பாளர் : ஏ. எச். காஷிஃப் பாடல் ஆசிரியர் : மஷூக் ரஹமான் மற்றும் ஏ. ஆர். ரஹமான்

ஆண் : ஹேய் ஆட்டாத வால்
கிட்ட வந்தா நீ ஹலால்

ஆண் : ஹேய் ஆட்டாத வால்
கிட்ட வந்தா நீ ஹலால்

ஆண் : ரெடியா வச்சுக்கமா
இவன் ஜலால் ஜலால்

ஆண் : ஆட்டாத வால்

ஆண் : ஜலாலி ஜலால் ஜலாலி ஜலால்

ஆண் : ஆட்டாத வால்

ஆண் : ஆட்டாத வால்

ஆண் : ஜலாலி ஜலாலி ஜலாலி ஜலாலி

ஆண் : ஹாஹாஹா

ஆண் : எட்டுத்து திசையும் கட்டிபுரட்டும்
ஆற்றல் இவனின் வேகம்
அணைகட்ட நெருங்கும் கூட்டம் யாவும்
நொறுங்கி தெரித்து ஓடும்

ஆண் : ஜலாலி ஜலாலி ஜலாலி ஜலாலி

ஆண் : முட்டி முளைத்து வானளாவ
நிற்பதிவனின் ரூபம்
அதை தட்டி தகர்க்க
சேரும் கரங்கள்
வெல்வதில்லை நாளும்

ஆண் : ஜலாலி ஜலாலி ஜலாலி ஜலாலி
ஜலாலி ஜலாலி ஜலாலி ஜலாலி

ஆண் : எளியோர் போற்றும்
தனியோன் இவனோ

ஆண் : ஜலாலி ஜலாலி ஜலாலி ஜலாலி
ஜலாலி ஜலாலி ஜலாலி ஜலாலி

ஆண் : கண்கள் இரண்டும் கதிரை விழுங்கி
எரியும் பிழம்பின் தீபம்
அறம் தவருமிடத்தில்
திமிறி எழுந்து நிற்கும்
இவனின் கோபம்

ஆண் : வலியவன் ஜலாலி
நிலைப்பவன் ஜலாலி
இரும்புலும் ஜலாலி
இறைவனும் ஜலாலி

ஆண் : தனை வென்றோனே
பகை வெல்வானே
எரிமலை போல்
பொறுமை செய்வோன்

ஆண் : ஜலாலி ஜலாலி ஜலாலி

ஆண் : தனை வென்றோனே
பகை வெல்வானே
எரிமலை போல்
பொறுமை செய்வோன்

ஆண் : ஜலாலி ஜலாலி ஜலாலி ஜலாலி

ஆண் : மோதாதே நீ காலி
இவன் பார்வை தீயே வீழ்த்துமே

ஆண் : ஜலாலி ஜலாலி ஜலாலி ஜலாலி
ஜலாலி ஜலாலி ஜலாலி ஜலாலி

ஆண் : ஜலாலி ஜலாலி ஜலாலி ஜலாலி
ஜலாலி ஜலாலி ஜலாலி ஜலாலி

ஆண் : ஹேய் ஆட்டாத வால்
கிட்ட வந்தா நீ ஹலால்

ஆண் : ஹேய் ஆட்டாத வால்
கிட்ட வந்தா நீ ஹலால்

ஆண் : ரெடியா வச்சுக்கமா
இவன் ஜலால் ஜலால்

ஆண் : ஆட்டாத வால்

ஆண் : ஜலாலி ஜலால் ஜலாலி ஜலால்

ஆண் : ஆட்டாத வால்

ஆண் : ஆட்டாத வால்

ஆண் : அஸ்ஸலாமு அலைக்கும்
வரஹ்மதுல்லாஹி
வபரகாதுஹ்

ஆண் : ஹாஹா ஹாஹா ஹா …

தேர் திருவிழா

பாடகர்கள் : ஷங்கர் மகாதேவன், A. R. Raihanah, Deepthi Suresh, Yogi Sekar
பாடலாசிரியர் : Vivek
இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
பாடகர்கள் : ஷங்கர் மஹாதேவன், ஏ. ஆர். ரைஹானா, தீப்தி சுரேஷ் மற்றும் யோகி சேகர் இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான் பாடல் ஆசிரியர் : விவேக்

ஆண் : சந்தன மாரிக்குத்தான்
சடுதியில் ஒரு கோலவா
சடுதியில் ஒரு கோலவா

குழு : ஓஒ …ஓஓ …

ஆண் : நம்ம மங்களமா வாழ
போடுங்கம்மா கொலவ
போடுங்கம்மா கொலவ

குழு : ஓஒ …ஓஓ …

ஆண் : நம்ம ஏரி குளம் நெறஞ்சிட
போடுங்கம்மா கொலவ
போடுங்கம்மா கொலவ

குழு : ஓஒ …ஓஓ …

ஆண் : நம்ம பஞ்சம் தீர
போடுங்கம்மா கொலவ
போடுங்கம்மா கொலவ

குழு : ஓஒ …ஓஓ …

ஆண் : ஓடி களச்ச சனம்
தேடி களச்ச சனம்
தன்ன மறந்து வந்து
ஆடி எளப்பார

ஆண் : தேர் திருவிழா

பெண் : தேர் திருவிழா

ஆண் : தேர் திருவிழா

பெண் : தேர் திருவிழா

ஆண் : ஓ நம்ம தேர் திருவிழா

பெண் : நம்ம தேர் திருவிழா

ஆண் : நம்ம தேர் திருவிழா

பெண் : நம்ம தேர் திருவிழா

ஆண் : ஏ தனியாகி ஓடப்பக்கம்
தூங்கி வழிஞ்ச மரம்
கிடை ஓரம் சொந்தம் சேர பூக்குதே

பெண் : பூக்குதே பூகுக்தே
ஓ… ஹோ… பூக்குதே பூக்குதே

ஆண் : மாட்டுக்கும் சீர் உண்டு
பூனைக்கும் மீன் துண்டு
வகுப்புக்கு விடுப்பு விட்டோம்
வறுமைக்கும் விடுப்பு விட்டோம்
மத்தளமும் பிச்சிக்கிட்டு
மொத்த சனம் கொட்டமிட

ஆண் : தன்னானே நானே நன்னா

பெண் : தேர் திருவிழா

ஆண் : தன்னானே நானே நன்னா

பெண் : தேர் திருவிழா

ஆண் : தன்னானே நானே நன்னா

பெண் : நம்ம தேர் திருவிழா

ஆண் : தன்னானே நானே நன்னா

பெண் : நம்ம தேர் திருவிழா

ஆண் : முனகல்கள்

பெண் : முனகல்கள்

பெண் : மட்டான் தொழுவத்துல
மாட்டெருவ அள்ளியாந்து
ஆட்டான் தொழுவத்துல
ஆட்டெருவ அள்ளியாந்து
ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ….
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்…

பெண் : மட்டான் தொழுவத்துல
மாட்டெருவ அள்ளியாந்து
ஆட்டான் தொழுவத்துல
ஆட்டெருவ அள்ளியாந்து

ஆண் : காட்டா எரு பெருக்கி
காரணம எரு இடித்து
கடல சிறு பயிரு
காராமணி பயிரு

பெண் : எல்லாம் சிறு பயிரு
எழுவகை மணி பயிரு
மொழ போட்ட மூணா நாளு
எங்க முத்து மாறி

ஆண் : பேயாதோ முத்துமழ
பேயாதோ முத்துமழ
பேயாதோ முத்துமழ
எங்க முத்து மாரி

ஆண் : ஓடி களச்ச சனம்
தேடி களச்ச சனம்
தன்ன மறந்து வந்து
ஆடி எளப்பார

ஆண் : தேர் திருவிழா

பெண் : தேர் திருவிழா

ஆண் : தேர் திருவிழா

பெண் : தேர் திருவிழா

ஆண் : ஓ நம்ம தேர் திருவிழா

பெண் : நம்ம தேர் திருவிழா

ஆண் : நம்ம தேர் திருவிழா

பெண் : நம்ம தேர் திருவிழா

ஆண் : ஏ தனியாகி ஓடப்பக்கம்
தூங்கி வழிஞ்ச மரம்
கிடை ஓரம் சொந்தம் சேர பூக்குதே

பெண் : பூக்குதே பூகுக்தே
ஓ… ஹோ… பூக்குதே பூக்குதே

ஆண் : மாட்டுக்கும் சீர் உண்டு
பூனைக்கும் மீன் துண்டு
வகுப்புக்கு விடுப்பு விட்டோம்
வறுமைக்கும் விடுப்பு விட்டோம்
மத்தளமும் பிச்சிக்கிட்டு
மொத்த சனம் கொட்டமிட

ஆண் : தன்னானே நானே நன்னா

பெண் : தேர் திருவிழா

ஆண் : தன்னானே நானே நன்னா

பெண் : தேர் திருவிழா

ஆண் : ஆத்தா …போடு .. முனகல்கள் : ………………

பெண் : கும்மியடி பெண்ணே கும்மியடி
நல்ல வளையல் குலுங்க கும்மியடி
கும்மியடி பெண்ணே கும்மியடி
நல்ல வளையல் குலுங்க கும்மியடி ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ….
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்…

பெண் : கும்மியடி பெண்ணே கும்மியடி
வருங்காலம் நமக்கு கும்மியடி
கும்மியடி பெண்ணே கும்மியடி
வருங்காலம் நமக்கு கும்மியடி

பெண் : மக்க மஞ்ச குளிக்கா
மாட்டு கொம்பு பூமணக்க
ஊரோர குட்டி சுவரு
போடுற ஊசி பல்லிளிக்க

பெண் : தெரியாத சொந்தமெல்லாம்
ஒரு நாள் ஒன்னு சேர
தனியான காலு ரெண்டும்
தாயூர் மண்ண சேர

பெண் : எங்க பசி மறைய
எங்க சாமி மனம் குளிர
சந்தோஷ கண்ணீருடன்
எங்க முத்து மாரி

ஆண் : பேயாதோ முத்துமாரி
பேயாதோ முத்துமாரி
பேயாதோ முத்துமாரி
எங்க முத்து மாரி

ஆண் : ஓடி களச்ச சனம்
தேடி களச்ச சனம்
தன்ன மறந்து வந்து
ஆடி எளப்பார

ஆண் : தேர் திருவிழா

பெண் : தேர் திருவிழா

ஆண் : தேர் திருவிழா

பெண் : தேர் திருவிழா

ஆண் : ஓ நம்ம தேர் திருவிழா

பெண் : நம்ம தேர் திருவிழா

ஆண் : நம்ம தேர் திருவிழா

பெண் : நம்ம தேர் திருவிழா

ஆண் : ஏ தனியாகி ஓடப்பக்கம்
தூங்கி வழிஞ்ச மரம்
கிடை ஓரம் சொந்தம் சேர பூக்குதே

பெண் : பூக்குதே பூகுக்தே
ஓ… ஹோ… பூக்குதே பூக்குதே

ஆண் : மாட்டுக்கும் சீர் உண்டு
பூனைக்கும் மீன் துண்டு
வகுப்புக்கு விடுப்பு விட்டோம்
வறுமைக்கும் விடுப்பு விட்டோம்
மத்தளமும் பிச்சிக்கிட்டு
மொத்த சனம் கொட்டமிட

ஆண் : தன்னானே நானே நன்னா

பெண் : தேர் திருவிழா

ஆண் : தன்னானே நானே நன்னா

பெண் : தேர் திருவிழா

ஆண் : தன்னானே நானே நானா
தன்னானே நானே நானா
தன்னானே நானே நானா
தன்னானே நானே நானா

ஆண் : தன்னானே நானே நானா
தன்னானே நானே நானா

ஆண் : தன்னானே நானே நானா
தன்னானே நானே நானா

திமிறி எழுடா

பாடகர்கள் : ஏ. ஆர். ரஹ்மான், பாம்பா பாக்யா, Shahul Hameed, Deepthi Suresh, Akshaya Shivkumar
பாடலாசிரியர் : Snehan
இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
திமிறி எழுடா! திமிறி எழுடா!
விடியல் தூரத்தில் இல்லை,
உன் கையில் தான்டா!
கோடி சூரியன் உதிக்கும் போது
இருள் எங்கே தங்கும்?
எதிரிகள் சூழ்ச்சி செய்யும் போது
வீரம் எழ வேண்டும்!

மலை போல் துணிவு இருந்தால்
எந்த பாதையும் மாறும்!
உன் நெஞ்சில் உறுதி இருந்தால்
தோல்வியும் ஓடும்!
திமிறி எழுடா! திமிறி எழுடா!
உன் வேகம் கண்டு,
பூமி அதிர வேண்டும்!
சாதி, மதம் தாண்டி
மனித இனம் வெல்ல வேண்டும்!

(பாடலின் நடுவே வரும் அதிரடியான ரப் மற்றும் கோரஸ் வரிகள்..)

விடியலின் காலம் இதுவே,
எழுந்திடு தோழா!
தடைகளை உடைத்து எரிந்திட,
குரலினை எழுப்புவாய்!