Apoorva Raagangal

Rajinikanth Apoorva Raagangal

அதிசய ராகம்…..

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
இசையமைப்பாளர் : M. S. Vishwanathan
பாடகர் : கே. ஜே யேசுதாஸ் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : அதிசய ராகம்…..
ஆனந்த ராகம்….ம்ம்
அழகிய ராகம்…..ம்ம் ம்ம் ம்ம்
அபூர்வ ராகம்…..

ஆண் : அதிசய ராகம்…..
ஆனந்த ராகம்….ம்ம்
அழகிய ராகம்…..ம்ம் ம்ம் ம்ம்
அபூர்வ ராகம்…..

ஆண் : அதிசய ராகம்…..

ஆண் : வசந்த காலத்தில்
மழை தரும் மேகம்
அந்த மழை நீர் அருந்த
மனதினில் மோகம்….
மோகம்….ம்ம்ம்….மோகம்….

ஆண் : வசந்த காலத்தில்
மழை தரும் மேகம்
அந்த மழை நீர் அருந்த
மனதினில் மோகம்….

ஆண் : இசையெனும் அமுதினில்
அவளொரு பாகம்
இசையெனும் அமுதினில்
அவளொரு பாகம்
இந்திர லோகத்து
சக்கரவாகம்

ஆண் : அதிசய ராகம்…..
ஆனந்த ராகம்….ம்ம்
அழகிய ராகம்…..ம்ம் ம்ம் ம்ம்
அபூர்வ ராகம்…..

ஆண் : பின்னிய கூந்தல்
கருநிற நாகம்
பெண்மையின் இலக்கணம்
அவளது தேகம்

ஆண் : பின்னிய கூந்தல்
கருநிற நாகம்
பெண்மையின் இலக்கணம்
அவளது தேகம்

ஆண் : தேவர்கள் வளர்த்திடும்
காவிய யாகம்
அந்த தேவதை கிடைத்தால்
அது என் யோகம்
அது என் யோகம்

ஆண் : ஒரு புறம் பார்த்தால்
மிதிலையின் மைதிலி
மறு புறம் பார்த்தால்
காவிரி மாதவி

ஆண் : இன்னுமா புரியல

ஆண் : ஒரு புறம் பார்த்தால்
மிதிலையின் மைதிலி
மறு புறம் பார்த்தால்
காவிரி மாதவி

ஆண் : முகம் மட்டும் பார்த்தால்
நிலவின் எதிரொலி
முகம் மட்டும் பார்த்தால்
நிலவின் எதிரொலி
முழுவதும் பார்த்தால்
அவளொரு பைரவி
அவளொரு பைரவி அவளொரு பைரவி

ஆண் : அதிசய ராகம்…..
ஆனந்த ராகம்….ம்ம்
அழகிய ராகம்…..ம்ம் ம்ம் ம்ம்
அபூர்வ ராகம்…..

கைக்கொட்டி சிரிப்பார்கள்

பாடகர்கள் : Siyak Mohammed
பாடலாசிரியர் : கண்ணதாசன்
இசையமைப்பாளர் : M. S. Vishwanathan
பாடகர் : சேக் முகம்மது இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : கைக்கொட்டி சிரிப்பார்கள்
ஊரார் சிரிப்பார்கள்
விளையாட்டு கல்யாணமே
தரும் விபரீத உறவாகுமே

ஆண் : கைக்கொட்டி சிரிப்பார்கள்
ஊரார் சிரிப்பார்கள்
விளையாட்டு கல்யாணமே தரும்
விபரீத உறவாகுமே
தலைமாறி கால் மாறுமே
அங்கு சொந்தங்கள் தடுமாறுமே

ஆண் : வீணை தன் நரம்பை
விரல் மீட்டும்போது
மிருதங்க ஒலி தோன்றுமா
விளக்கேற்றி எடுத்து
பகல் நேரம் வைத்தால்
இழைக்கின்ற ஒளி தோன்றுமா

ஆண் : கறக்கின்ற பாலை
சுரக்கின்ற மடிக்குள்
அனுப்புதல் நடக்காதம்மா
கறக்கின்ற பாலை
சுரக்கின்ற மடிக்குள்
அனுப்புதல் நடக்காதம்மா
பிறக்கின்ற ஆசை
தவறாக இருந்தால்
நடக்கவும் கூடாதம்மா

ஆண் : விளையாட்டு கல்யாணமே
தரும் விபரீத உறவாகுமே
தலைமாறி கால் மாறுமே
அங்கு சொந்தங்கள் தடுமாறுமே

ஆண் : கைக்கொட்டி சிரிப்பார்கள்
ஊரார் சிரிப்பார்கள்

கேள்வியின் நாயகனே…ஏ…..

பாடகர்கள் : வாணி ஜெயராம், B. S. Sasirekha
பாடலாசிரியர் : கண்ணதாசன்
இசையமைப்பாளர் : M. S. Vishwanathan
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் பி. எஸ். சசி ரேஹா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : கேள்வியின் நாயகனே…ஏ…..
இந்தக் கேள்விக்கு பதில் ஏதய்யா
கேள்வியின் நாயகனே…ஏ…..
இந்தக் கேள்விக்கு பதில் ஏதய்யா

பெண் : இல்லாத மேடை ஒன்றில்
எழுதாத நாடகத்தை
எல்லோரும் நடிக்கின்றோம்
நாமே எல்லோரும் பார்க்கின்றோம்
எல்லோரும் நடிக்கின்றோம்
நாமே எல்லோரும் பார்க்கின்றோம்

பெண் : கேள்வியின் நாயகனே
இந்தக் கேள்விக்கு பதில் ஏதய்யா

பெண் : பசுவிடம் கன்று வந்து
பால் அருந்தும்
கன்று பால் அருந்தும் போதா
காளை வரும்
சிலரது வாத்தியத்தில் இரண்டு பக்கம்

பெண் : சிலரது வாத்தியத்தில் இரண்டு பக்கம்
கொஞ்சம் சிந்தை செய்தால்
உனக்கு பிறக்கும் வெட்கம்
தாலிக்கு மேலும் ஒரு தாலி உண்டா
வேலிக்கு இன்னொருவன் வேலி உண்டா
கதை எப்படி அதன் முடிவெப்படி
கதை எப்படி அதன் முடிவெப்படி

பெண் : கேள்வியின் நாயகனே
இந்தக் கேள்விக்கு பதில் ஏதய்யா

பெண் : தலைவன் திருச்சாலூர்
வந்துவிட்டான்
மங்கை தரும தரிசனத்தை தேடுகின்றான்..ஆன்….
தேடுகின்றான் தேடுகின்றான் தேடுகின்றான்
ஹான்……ஆன்

பெண் : தலைவன் திருச்சாலூர்
வந்துவிட்டான்
மங்கை தரும தரிசனத்தை தேடுகின்றான்
அலமேலு அவன் முகத்தை
காண்பாளோ
மங்கை அவனோடு திருமலைக்குச்
செல்வாளோ…….
செல்வாளோ செல்வாளோ

பெண் : கேள்வியின் நாயகனே
இந்தக் கேள்விக்கு

பெண் : கேள்வியின் நாயகனே
இந்தக் கேள்விக்கு

பெண் : பதில் ஏதய்யா

பெண் : கேள்வியின் நாயகனே
இந்தக் கேள்விக்கு பதில் ஏதய்யா

பெண் : ஒரு கண்ணும் மறு கண்ணும்
பார்த்துக்கொண்டால்

பெண் : பார்த்துக்கொண்டால்

பெண் : ஒரு கண்ணும் மறு கண்ணும்
பார்த்துக்கொண்டால்
அவை ஒன்றோடு ஒன்று சொல்லும்
சேதி என்ன

பெண் : இரு கண்ணும் ஒன்றாகச்
சேர்ந்துவிட்டால்
இரு கண்ணும் ஒன்றாகச்
சேர்ந்துவிட்டால்
அவை இரண்டுக்கும் பார்வையிலே
பேதம் என்ன
அவை இரண்டுக்கும் பார்வையிலே
பேதம் என்ன

பெண் : பேதம் மறைந்ததென்று
கூறு கண்ணே

பெண் : நமது பேதம் தனை
மறந்து நடக்கும் முன்னே

பெண் : பேதம் மறைந்ததென்று
கூறு கண்ணே

பெண் : நமது பேதம் தனை
மறந்து நடக்கும் முன்னே

பெண் : கண்ணே உன் காலம் சென்ற
கதை என்ன

பெண் : உன்னைக் காணப் பிழைத்திருந்தேன்
வேறு என்ன

பெண் : கண்ணே உன் காலம் சென்ற
கதை என்ன

பெண் : உன்னைக் காணப் பிழைத்திருந்தேன்
வேறு என்ன

பெண் : உடல் எப்படி

பெண் : ஒன்றில் இருந்தாற்படி

பெண் : மனம் எப்படி

பெண் : நீ விரும்பும் படி

பெண் : கேள்வியின் நாயகியே
இந்தக் கேள்விக்கு பதில் ஏதம்மா பெண்கள் : இல்லாத மேடை ஒன்றில்
எழுதாத நாடகத்தை
எல்லோரும் நடிக்கின்றோம்
நாமே எல்லோரும் பார்க்கின்றோம்

பெண் : பழனி மலையிலுள்ள
வேல் முருகா சிவன்
பல்லாண்டு ஏங்கி விட்டான்
வா முருகா

பெண் : பழனி மலையிலுள்ள
வேல் முருகா சிவன்
பல்லாண்டு ஏங்கி விட்டான்
வா முருகா

பெண் : பிடிவாதம் தன்னை
விடு பெரு முருகா
கொஞ்சம் பிரியத்துடன்
பக்கத் திரு முருகா

பெண் : பிடிவாதம் தன்னை
விடு பெரு முருகா
கொஞ்சம் பிரியத்துடன்
பக்கத் திரு முருகா
கொஞ்சம் பிரியத்துடன்
பக்கத் திரு முருகா
திருமுருகா…….திருமுருகா……

ஆஅ…..ஆஅ….ஆஅ….ஆஅ…..

பாடகர்கள் : வாணி ஜெயராம்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
இசையமைப்பாளர் : M. S. Vishwanathan
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : ஆஅ…..ஆஅ….ஆஅ….ஆஅ…..
ஹா…..ஆஅ…..ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ….
ஹாஆ…….ஆஅ….ஆஅ….ஹா..ஆஅ….ஆஅ…
ஹா…..ஆஅ…..ஆஅ….ஆஅ….ஆஅ….

பெண் : ஏழு ஸ்வரங்களுக்குள்
எத்தனை பாடல்
ஏழு ஸ்வரங்களுக்குள்
எத்தனை பாடல்
இதயச் சுரங்கத்துள்
எத்தனை கேள்வி

பெண் : ஏழு ஸ்வரங்களுக்குள்
எத்தனை பாடல்
இதயச் சுரங்கத்துள்
எத்தனை கேள்வி
காணும் மனிதருக்குள்
எத்தனை சலனம்

பெண் : காணும் மனிதருக்குள்
எத்தனை சலனம் வெறும்
கற்பனை சந்தோஷத்தில்
அவனது கவனம்…ம்ம்ம்….
ஏழு ஸ்வரங்களுக்குள்
எத்தனை பாடல்
ஹா…..ஆஅ…..ஆஅ….ஆஅ…..
ஹா….ஆஅ….ஆ….

பெண் : காலை எழுந்தவுடன்
நாளைய கேள்வி அது
ஹா…..ஆஅ…..ஆஅ….ஆஅ…..
ஹா….ஆஅ….ஆ….

பெண் : காலை எழுந்தவுடன்
நாளைய கேள்வி அது
கையில் கிடைத்த பின்னும்
துடிக்குது ஆவி
கையில் கிடைத்த பின்னும்
துடிக்குது ஆவி

பெண் : ஏன் என்ற கேள்வி ஒன்று
என்றைக்கும் தங்கும்
ஏன் என்ற கேள்வி ஒன்று
என்றைக்கும் தங்கும் மனிதன்
இன்பம் துன்பம் எதிலும்
கேள்விதான் மிஞ்சும்
இன்பம் துன்பம் எதிலும்
கேள்விதான் மிஞ்சும்

பெண் : ஏழு ஸ்வரங்களுக்குள்
எத்தனை பாடல்…..ல்ல்ல்ல்…..

பெண் : எனக்காக நீ அழலாம்
இயற்கையில் நடக்கும்
ஹா…..ஆஅ…..ஆஅ….ஆஅ…
ஹா….ஆ…ஆஅ….

பெண் : எனக்காக நீ அழலாம்
இயற்கையில் நடக்கும்
நீ எனக்காக உணவு உண்ட
எப்படி நடக்கும்
நமக்கென்று பூமியிலே
கடமைகள் உண்டு அதில்
நமக்காக நம் கையால்
செய்வது நன்று
நமக்காக நம் கையால்
செய்வது நன்று

பெண் : ஏழு ஸ்வரங்களுக்குள்
எத்தனை பாடல்…..

பெண் : ஆரம்பத்தின் பிறப்பும்
உன் கையில் இல்லை….ஈ……ஈ….
ஹா…..ஆஅ…..ஆஅ….ஆஅ…
ஹா….ஆ…ஆஅ….

பெண் : ஆரம்பத்தின் பிறப்பும்
உன் கையில் இல்லை
என்றும் அடுத்தடுத்த நடப்பும்
உன் கையில் இல்லை
பாதை வகுத்த பின்பு
பயந்தென்ன லாபம் அதில்
பயணம் நடத்திவிடு
மறைந்திடும் பாவம்
பயணம் நடத்திவிடு
மறைந்திடும் பாவம்

பெண் : ஏழு ஸ்வரங்களுக்குள்
எத்தனை பாடல்…..

பெண் : நாளைப் பொழுது என்றும்
நமக்கென வாழ்க அதை
நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க
நாளைப் பொழுது என்றும்
நமக்கென வாழ்க அதை
நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க

பெண் : வேளை பிறக்கும் என்று
நம்பிக்கை கொள்க
வேளை பிறக்கும் என்று
நம்பிக்கை கொள்க எந்த
வேதனையும் மாறும் மேகத்தைப் போல
வேதனையும் மாறும் மேகத்தைப் போல

பெண் : ஏழு ஸ்வரங்களுக்குள்
எத்தனை பாடல்
இதயச் சுரங்கத்துள்
எத்தனை கேள்வி
காணும் மனிதருக்குள்
எத்தனை சலனம் வெறும்
கற்பனை சந்தோஷத்தில்
அவனது கவனம்

பெண் : ஏழு ஸ்வரங்களுக்குள்
எத்தனை பாடல்…..
ஹா…..ஆஅ…..ஆஅ….ஆஅ…ஹா….ஆ…ஆஅ….
ஹா…..ஆஅ…..ஆஅ….ஆஅ…ஹா….ஆ…ஆஅ….